முக்கியசெய்திகள்

கல்புர்கி கொலை: சந்தேகிக்கும் இருவரின் உருவ படங்கள் வெளியீடு

கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் உருவ படங்களை கர்நாடக போலீசார் வெளியிட்டுள்ளனர். கன்னட எழுத்தாளரான கல்புர்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக மாநிலம் தர்வாத்தில், மர்மநபர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அம்மாநில சிபிசிஐடி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் உருவப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் சிசிடிவியில் …

மேலும் படிக்க

ஹர்திக் படேலின் இட ஒதுக்கீடு போராட்டம் அபாயகரமானது: வைகோ

படேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்க்கக் கோரி ஹர்திக் படேல் தெரிவித்துள்ள கருத்துகளும், நடத்தி வரும் போராட்டமும் அபாயகரமானவை. அவரது குரல் மூலம் ஒலிப்பது ஆதிக்கச் சக்திகளின் குரல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் …

மேலும் படிக்க

இளங்கோவன் ஜாமீன் நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்

காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற முன் ஜாமீன் நிபந்தனையை, இளங்கோவனின் கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வளர்மதி என்பவர் தொடர்ந்த வழக்கில், மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் தினமும் இளங்கோவன் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த நிலையில், நிபந்தனையை தளர்த்தக் கோரி இளங்கோவன் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை …

மேலும் படிக்க

புதுச்சேரி காவல் நிலையத்தில் கைதி மர்ம மரணம்: 5 போலீசார் சஸ்பெண்டு

புதுச்சேரி, வில்லியனுர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒருவர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியை அடுத்த ஜி.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவி என்கிற முத்துக்குமரன். வெட்டியான் வேலை செய்து வந்த இவரை, திருட்டு வழக்கு ஒன்றில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வில்லியனூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முத்துகுமரன் நேற்றிரவு காவல்நிலையத்தில் …

மேலும் படிக்க

மொபைலில் ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

மொபைலில் மாதாந்திர ரயில் சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் எடுக்கும் வசதி அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். டில்லி பல்வால் புறநகர் ரயில் பிரிவில், செல்போனில் சாதாரண ரயில் டிக்கெட் பெறும் முறையை ரயில்வே துறை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த சில நாட்களில் சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் மாதாந்திர சீசன் …

மேலும் படிக்க

இமாச்சலில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி, 15 க்கும் மேற்பட்டோர் காயம்

இமாச்சல பிரதேசத்தில், 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலம் ரெகோங் பியோ என்ற இடத்தில் இருந்து ராம்பூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தியா-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் மலை மீது நாத்பா என்ற இடத்தில் அந்த பேருந்து சென்ற போது திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. சட்லெஜ் …

மேலும் படிக்க

சென்னை சென்ட்ரலில் ரயிலை மறியல் போராட்டம்

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 சங்கங்களின் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் …

மேலும் படிக்க

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. கொழும்பு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று 386 ரன்கள்  வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, …

மேலும் படிக்க

புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணத்திற்கு, நெடுந்தீவுக்கும் இடையே உள்ள நயினார் தீவு என்ற இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று …

மேலும் படிக்க

எம்.எம்.கல்பர்கி கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடகாவில் உள்ள தர்வாத்தில் உள்ள எம்.எம்.கல்பர்கியின் இல்லத்தில் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது கொலைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி, …

மேலும் படிக்க