இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜெயின் சமூகத்தினரின் பர்யூஷன் விரத காலத்தை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று மும்பை மாநகராட்சி தடை விதித்தது. இந்த உத்தரவை நிறுத்தி வைத்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயின் சமூகத்தினர் தாக்கல் …
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இந்நன்னாளில் அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ எங்கள் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
மேலும் படிக்கவிநாயகர் சதுர்த்தி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னவே யானை முகத்தவனே என்று மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கணபதியைத் துதித்து வழிபட்டால் வினைகள் நீங்கி, கவலைகள் தீரும் என்று முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை தொழுது புதிய …
மேலும் படிக்கதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வாக்காளர் விவரங்களை http://www.elections.tn.gov.in/ இந்த இணையதளத்தில் காணலாம்.
மேலும் படிக்கதேமுதிக யாருடன் கூட்டணி? விஜயகாந்த் பதில்
தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தேமுதிக மக்களிடமும், தெய்வத்துடனும்தான் கூட்டணி. வேறு யாரிடமும் கூட்டணி இல்லை என்று கூறினார். இந்த நாள் மிக்க மகிழ்ச்சியான நாள். தே.மு.தி.க. தொடங்கி 10 ஆண்டுகள் …
மேலும் படிக்கதொழில் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் குஜராத், தமிழகத்திற்கு 12 ம் இடம்
இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலங்களை தரவரிசைப்படுத்தும் வகையிலான ஆய்வை மேற்கொள்ளுமாறு உலக வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வை உலக வங்கி மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, தொழில் தொடங்க சாதகமான சூழல் உள்ள மாநிலங்களில் …
மேலும் படிக்கஈரான் படத்திற்கு இசையமைத்தற்கு பத்வா: ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்
ஈரானிய படத்திற்கு இசையமைத்தால் பத்வா வெளியிடப்பட்டதையடுத்து, இது குறித்து அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மொழி திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை …
மேலும் படிக்கஅதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்க வேண்டும்:ஜெயலலிதா
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கு தமிழர்கள் தழைத்தோங்கி வாழ்ந்திடப் பிறந்த நம் அன்புக்குரிய பேரறிஞர் அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்த மடல் வழியாக, கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் இனத்தின் முன்னேற்றம் ஒன்றையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டு, பேரறிஞர் …
மேலும் படிக்கஇந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி
இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 என்ற இந்தி தொலைக்காட்சியில் நேற்றிரவு சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா குறித்து நேரலையாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற ஓம் ஜி என்ற சாமியார், மற்றொரு பங்கேற்பாளரான ஜோதிடர் ராக்கி பாய் என்ற பெண்ணிடம் கடுமையான வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ராதே மா குறித்து எவ்வாறு விமர்சிக்கலாம்; …
மேலும் படிக்கதமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு
வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு பருப்பு வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது இந்த மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு பருப்பு வரத்து குறைந்துள்ளது. இதனால், 135 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ துவரம் பருப்பு சில்லறை விலையில் தற்போது 150 …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி