Tag Archives: உலகம்

ஐபோன் 6, ஆப்பிள் வாட்ச் வெளியாகின: இந்தியாவில் செப்.26 முதல் விற்பனை

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் மற்றும்  அப்பிள் வாட்ச் ஆகியன நேற்றிரவு வெளியிடப்பட்டன.கலிபோர்னியாவில் நடைபெற்ற  விழாவில் அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் இவற்றை அறிமுகப்படுத்தினார். ஆசியாவின் இரண்டாவது பெரிய‌ வர்த்தகச் சந்தையான  இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன் 6- செப்டம்பர் 26ல் வெளி வர உள்ளது. இது குறித்து ஆப்பிளின் இந்திய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஐபோன் 6 மற்றும் …

மேலும் படிக்க

யுக்ரைனில் ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டுள்ளது – மலேசியப் பிரதமர்

யுக்ரைன் மீது பறந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைத்தான் ஹாலாந்து விசாரணை அறிக்கை காட்டுவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். விமானம் விழுந்த இடத்தில் உள்ள எஞ்சிய உடல் பாகங்களை கண்டெடுக்க அந்தப் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் மலேசியக் குழுவுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ரசாக் கேட்டுள்ளார். விமானம் ஏன் கிழே விழ்ந்தது என்பதையும் இந்தக் குழு …

மேலும் படிக்க

மறுபடியும் உலக அளவில் அவமானப்பட்டார் சுப்ரமணிய சுவாமி

பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கானோர் பிஞ்சுக் குழந்தைகள் உட்பட சுமார் 2500 பேரை ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்தது. இந்த இனப்படுகொலைகள் தொடர்பான செய்திகளில் இந்தி  ‘ஷோலே’ திரைப்படக் காட்சிகளை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது என்று ஸ்கீர்ன்ஷாட் ஒன்றை சுப்ரமணிய சுவாமி சில நாட்களுக்கு முன்பு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்தார். அதில் இது  மஞ்சள் பத்திரிகைத்தனம் என அவர் குறிப்பிட்டுருந்தார். இது ஃபேஸ்புக்கில் படுவேகமாக பரவியது. …

மேலும் படிக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன் போது இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க

இத்தாலி கடற்படை வீரர் நேரில் 2 வாரங்கள் ஆஜராக விலக்கு : உச்ச நீதிமன்றம்

இந்திய கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் ஒருவர், இரண்டு வாரங்களுக்கு காவல்துறை முன் ஆஜராக தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களில் ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அவர் இரண்டு வாரங்களுக்கு ஆஜராக விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை? ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகள் குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகுமென ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் ப்ரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகளை பொறுத்து புதிய பொருளாதார தடைகள் அமையும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லையெனில், …

மேலும் படிக்க

பாகிஸ்தானில் பயங்கர கலவரம் – பிரதமர் அலுவலகம், அரசு டிவி அலுவலகம் சூறை

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகுமாறு  முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், மத குரு தார் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இப்போது கூட்டணி அமைத்து, போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இம்ரான் கானும், தார் உல் காதிரியும், பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டின் முன்பாக கூடி தர்ணாவில் ஈடுபடும்படி தங்கள் கட்சி தொண்டர்களுக்கு …

மேலும் படிக்க

மேற்கத்திய நாடுகளுக்கு விளாடிமிர் புதின் கடும் எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்  தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் மற்ற நாடுகளுடன் மிகப்பெரிய சண்டையில் ஈடுபடும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும், தங்களிடம் மோத நினைத்தால் அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் அவர் ரஷ்ய ராணுவம்  நவீன தொழில்நுட்பங்களுடன் வலிமைபெற்று வருவதாகவும் ராணுவ வலிமையில் தனது அரசு முழு கவனம் செலுத்தி வருவதகாவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

ஈராக்கில் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய் உருக்கமான வேண்டுகோள்

ஈராக்கில் ISIS பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய், தனது மகனை விடுவிக்க கோரி  உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அமெரிக்க பத்திரிக்கையாளரை கொன்று விடப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அந்த அமைப்பின் தலைவருக்கு அந்த அபலைத்தாய் விடுத்துள்ள கோரிக்கையில், இஸ்லாமிய அரசின் தலைவரான உங்களது கையில் எனது மகனின் உயிர் உள்ளது. அவனை, முகமது நபியின் வழித் தோன்றல் கலிபாவான நீங்கள் மன்னித்து உயிர் பிச்சை வழங்க …

மேலும் படிக்க

போர்நிறுத்தம்: இஸ்ரேல், ஹமாஸ் ஒப்புதல்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன. இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து 50 நாள்களாக நடைபெற்ற போரில் 2,137 பாலஸ்தீனர்களும், இஸ்ரேலைச் சேர்ந்த 68 பேரும் பலியானார்கள். இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் எகிப்து நாடு களத்தில் இறங்கியது. இந்நிலையில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை …

மேலும் படிக்க