Tag Archives: தமிழக அரசு

தமிழ் மொழி காத்திட வேண்டும்.

தமிழ் மொழி காத்திட வேண்டும். தமிழக அரசு வேலைகளில் தமிழருக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி பாரத மறுமலர்ச்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு. மு. முரளி அவர்கள் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசினார். கஜினி முகமதுவின் உருது மொழியிடம் இரவல் வாங்கி, 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகிய இந்தியை நம் தேசத்தின் ஆட்சி மொழியாக்க வேண்டும். இது அவமானமில்லையா?மத்திய அரசு, மாநில மொழிக்கூட இல்லாத சமஸ்கிருதத்திற்கு ஏன் …

மேலும் படிக்க

தனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு திரு. K.R. நந்தகுமார் வேண்டுகோள்…

தனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இன்றைய முக்கிய செய்தி நீங்கள் அறிந்திருப்பீர்கள்… தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை மூன்றாண்டுகள் தாருங்கள் …

மேலும் படிக்க

தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவை குறைத்து கணக்கிடப்பட்டது எப்படி? – தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி செலவுத் தொகை எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது என விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். அந்த இடங்களுக்கான கட்டணத் தொகை, குழந்தைகளுக்கான கல்விச் …

மேலும் படிக்க

ஒரு வருட ஊரடங்கு போட்டாலும் கவலை இல்லை! ஒரு பத்திரிக்கையாளரின் மனக்குமுறல்…

தலைநகர் சென்னையில் வசித்து வரும் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கிங் மேக்கர் செல்வம் சிறு ஆதங்கம். கொரோனா நோயினால் தமிழக அரசு அறிவிக்கும் ஊரடங்கு, முழு ஊரடங்கால், தற்போது ஏழை மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் கூட,.. ஒரு வேலை உணவுக்கு கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்… ஆரம்ப காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வேலை உணவுகளை கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்களும் தற்போது குறைந்துவிட்டனர். நீங்கள் …

மேலும் படிக்க

கொரோனா ஊரட‌ங்கில் காவலர்களின் உன்னத பணி…..

தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகின்ற சூழலில் சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் உலா வந்துக் கொண்டிருக்க, இவர்களது நலனில் அக்கறை கொண்ட நமது அரசு, முழு ஊரடங்கு கொண்டு வரும் பட்சத்தில் நோயின் தாக்கத்தை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்துதான் கடந்த …

மேலும் படிக்க

கொரோனா பாதித்தவர்களை கைவிடுகிறதா தமிழக அரசு ? தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் DSR சுபாஷ் கேள்வி?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு வருவது போன்ற ச‌ந்தேக‌ம் எழுவதாக, மக்கள் நலனில் உள்ள அக்கறையில் தமிழக அரசை சாடியுள்ளார் அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்க செயலாளர் மறறும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத் தலைவர் திரு. DSR. சுபாஷ் அவர்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கையில், ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை தற்போது கடும் விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது எனவும் மாவட்ட வாரியாக தினமும் …

மேலும் படிக்க

நில அவசரச் சட்டம்: தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியுள்ள நிலையில், அதனை ஆதரித்து வாக்களித்த தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளின் நலனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்வாங்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிப்புக்கு …

மேலும் படிக்க

சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மேல்முறையீடு

தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு, தமிழக சட்டபேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கு தொடர்ந்தார். அப்போது, நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சாத்தியமில்லை என தமிழக அரசு …

மேலும் படிக்க

சென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு தேவை : நிதின் கட்கரி வேண்டுகொள்

சென்னைத் துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை திட்டப் பணிகள் தொடர்பான பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும், இப்பணியை முடிக்க தமிழக முதல்வர் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக சென்னைத் துறைமுகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- சென்னைத் …

மேலும் படிக்க

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு, 1.11.2014 முதல் அமல்: தமிழக அரசு

ஆவின் நிறுவனத்தின் சமன்படுத்திய பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தி.மு.க. ஆட்சியின் போது, ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்து கூட பணம் அளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், தனது கொள்முதலையே குறைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு ஆவின் நிறுவனம் தள்ளப்பட்டது. …

மேலும் படிக்க