Tag Archives: விளையாட்டு

ஜெர்மனி, அர்ஜென்டீனாவை வீழ்த்தி கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது

கூடுதல் நேர ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதின. கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது …

மேலும் படிக்க

நெதர்லாந்து வென்றால் விண்வெளிக்கு இலவச பயணம்: நெதர்லாந்து நிறுவனம் பரிசு

நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கோப்பையை தட்டி வந்தால் அனைத்து வீரர்களையும், இலவசமாக விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒன்று பரிசு அறிவித்துள்ளது. 3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இன்னும் நெதர்லாந்து கோப்பையை வெல்லவில்லை. அதன் கோப்பை கனவு தொடர்ந்து நழுவிக் கொண்டேயிருக்கிறது. இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியிலும் தோல்வியைச் சந்திக்காமல் காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த நிலையில் …

மேலும் படிக்க

வட சென்னை, ஈகிள் பவர் குங்ஃபூ பள்ளியின் சான்றிதழ் வழங்கும் விழா

ஈகிள் பவர் குங்ஃபூ  பள்ளியின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் மாணவர்களின் வீர தீர விளையாட்டு சாகச நிகழ்ச்சிகள் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை யில் உள்ள வைத்தி திருமண ஹாலில் கடந்த 22/06/2013 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் திரு. என். பாஸ்கரன் MA., BL., அட்வகேட், CBI, பிரசிடெண்ட், ஈகிள் பவர் குங்ஃபூ  பள்ளி மற்றும் திரு கே. ஜானகிராமன் Bcom., அசிஸ்டெண்ட் பிரசிடெண்ட் இவர்கள் முன்னிலை வகிக்க சிறப்பு …

மேலும் படிக்க

ஐசிசி தலைவரானார் சீனிவாசன்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டில், ஐசிசி கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஐசிசி தலைவராக உறுதிசெய்யப்பட்டதை மிகுந்த கவுரமாகக் கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டின் வலுவான …

மேலும் படிக்க

இந்து கடவுளை அவமதித்ததாக, டோனி க்கு கைது வாரண்டு ஆந்திர கோர்ட்டு பிறப்பித்தது

இந்து கடவுளை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத கிரிக்கெட் வீரர் டோனி க்கு ஆந்திர கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது. பிஸினர் டுடே ஏப். 2013 இதழின் அட்டையில் வெளியான புகைப்படத்தை வைத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்துக் கடவுள் விஷ்ணு போல் வரையப்பட்டிருந்த படத்தில் தோனி படத்துடன் ‘காட் ஆஃப் பிக் டீல்” என்ற தலைப்பிட்டு வெளியானது. அதில் ஒரு கையில் ஒரு நிறுவனத்தில் ஷூவை தோனி …

மேலும் படிக்க

உலக கோப்பை கால்பந்து: கேமரூனை பந்தாடியது பிரேசில்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரேசில் அணி கேமரூன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதல் பாதி ஆட்டம் தொடங்கிய  17வது நிமிடத்தில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். 26-வது நிமிடத்தில் கேமரூனின் மேடிப் முதல் கோலை அடித்து கோல் கணக்கை சமன் செய்தார். 35வது நிமிடத்தில் மீண்டும் நெய்மார்  கோல் …

மேலும் படிக்க

ஃபார்முலா 1 நட்சத்திரம் ஷூமேக்கர் கோமாவிலிருந்து மீண்டார்

ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் நட்சத்திர வீரர் மைக்கேல் ஷூமேக்கர் கோமாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் இன்று வெளியிட்டனர். மேலும் அவரது ஆரோக்கியம் சீரடைய மறுவாழ்வு சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தென் கிழக்கு பிரான்சில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். அவரது குடும்பத்தினர் ஷூமாக்கருக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு இரவும் பகலும் அயராது சிகிச்சை அளித்து மீட்ட மருத்துவர்களுக்கும் …

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை: உலகச் சாம்பியன் ஸ்பெயின் படுதோல்வி

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் தனது முதல் போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவர்களிடம் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி அவர்களை 5-1 எனும் கணக்கில் வென்றது. ஐரோப்பாவின் இரண்டு முன்னணி கால்பந்து அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி சால்வடோர் நகரில் நடைபெற்றது. ஆட்டத்தின் போது அவ்வப்போது மழையும் பெய்தது. இப்போட்டியின் 27 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்ஃபோன்ஸோ பெனால்டி முறையில் …

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை: கேமரூனை வென்றது மெக்ஸிகோ

பிரேசிலின் வடகிழக்கேயுள்ள நட்டால் நகரில் மழையிலே நடைபெற்ற ஒரு போட்டியில் கேமரூன் அணியை மெக்ஸிகோ 1-0 எனும் கணக்கில் வென்றது. போட்டியின் இரண்டாவது பகுதியில் 61 ஆவது நிமிடத்தில், ஒரிபி பெராட்லா ஒரு கோல் அடிக்க மெக்ஸிகோ 1-0 என்று முன்னிலை பெற்றது. பின்னர் அந்த நிலையை தக்கவைத்துக் கொண்டு வெற்றியும் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மெக்ஸிகோ அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. எந்தவொரு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியிலும் …

மேலும் படிக்க

நேய்மர் பெனால்டி கிக் – அது கூடைப்பந்தாட்டத்தில்தான், குரேஷிய மேலாளர்

உலகக் கோப்பைக் கால்பந்து முதல் போட்டியில் சர்ச்சைக்குரிய பெனால்டி கிக் கொடுத்த ஜப்பானிய நடுவர் மீது குரேஷிய அணி மேலாளர் நிகோ கோவக் கடும் விமர்சனம் செய்தார் ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் குரேஷிய வீரர் லவ்ரென், பிரேசில் வீரர் ஃபிரெட் என்பவரை முறை தவறித் தடுத்ததாக ஜப்பானிய நடுவர் நிஷிமோரா பிரேசில் சார்பாக பெனால்டி கிக் கொடுத்தார். நெய்மர் அதனை கோலாக மாற்றியது பிரேசிலுக்கு முன்னிலை பெற்றுத் தந்தது. நடுவரின் …

மேலும் படிக்க