அமுரா

அமெரிக்காவில் சீக்கியர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிகாகோ நகரைச் சேர்ந்தவர் இந்தர்ஜித் சிங் முக்கர். சீக்கியரான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை, அங்குள்ள கடை ஒன்றை நோக்கி தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவருடைய காரை வழிமறிக்கும் வகையில் மற்றொரு கார் குறுக்கீடு செய்தது. அவருக்கு வழிவிடுவதற்காக, முக்கர் தனது காரை நிறுத்தினார். அப்போது, குறுக்கீடு செய்த நபர் தனது காரிலிருந்து இறங்கி முக்கரை சரமாரியாகத் …

மேலும் படிக்க

முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் கோடி முதலீடுகள் பெற இலக்காக கொண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ந்தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டனர். ஆனால், இலக்கை விட இரண்டு மடங்கு முதலீடு குவிந்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தனது நிறைவு உரையில் குறிப்பிட்டார். …

மேலும் படிக்க

9/11, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் தினம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 14ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உலகையே அச்சுறுத்திய இந்த தீவிரவாத தாக்குதலில், 2,977 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்க, கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் அந்த கோர சம்பவம் நிறைவேறியது. அமெரிக்காவில் பயணிக்கும் 4 விமானங்களைக் கடத்திய அல்கொய்தா தீவிரவாதிகள், அவற்றில் இரண்டை, நியூயார்க்கில் …

மேலும் படிக்க

தற்கொலைகள் இந்தியாவில்தான் அதிகம்

உலக அளவில் பார்க்கும் போது, இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களில் தான் அதிக அளவில் தற்கொலைகள் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்கொலைத் தலைநகராக சென்னை மாறி வருகிறது. இளம் வயதினரே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் லட்சுமி. …

மேலும் படிக்க

திருமுல்லைவாயல் காவல்துறைக்கு டியுஜே சார்பில் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம்

ஒரு கடத்தல் தொடர்பான திருமுல்லைவாயலில் காவல் நிலையத்திற்கு செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறை நண்பர்களே வணக்கம், நாங்கள் உங்களை போல் மக்கள் பணிகளை செய்து வருகிறோம். நாட்டில் நடக்கும் சம்பவங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பணியை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் நடந்து முடிந்த கடத்தல் …

மேலும் படிக்க

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு விவரங்கள்

தமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த விவரங்கள். கிண்டி கத்திப்பாராவில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் அமைந்துள்ள வர்த்தக மையத்தின் முதல் நுழைவாயிலில் இருந்து அங்குள்ள முதலாவது மற்றும் இரண்டாவது அறைக்கு செல்லலாம். அடுத்து அங்கிருந்து கூட்ட அரங்கிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அந்த மையத்தின் பின்பகுதியில், மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கான …

மேலும் படிக்க

முதல்வர் தலைமையில் நாளை தொடங்குகிறது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில்  நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 25 கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்திறகு, ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான …

மேலும் படிக்க

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன்

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் நியாயமற்ற பேச்சு கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் அண்மையில் அறிவித்தது கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாறானது எனவும் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தை …

மேலும் படிக்க

உட்கட்சி தேர்தலில் முறைகேடு: பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்

கர்நாடக அதிமுக உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி, கர்நாடக அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வராஜ் உள்பட 35 பேர் பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, வரும் 26ம் தேதிக்குள், இது குறித்து பதிலளிக்க வேண்டும் …

மேலும் படிக்க

நடிகை சரண்யா மோகன் திருமணம் நடைபெற்றது!

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகனின் திருமணம் கேரளாவின் ஆலப்புழாவில் நேற்று நடைபெற்றது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்கமாட்டேன் என்று சரண்யா கூறியுள்ளார்.

மேலும் படிக்க