இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் – அட்சயாவின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை தி பார்க் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
மேலும் படிக்கசோனி டிவியின் இண்டியன் ஐடல் டைட்டில் வாய்ப்பை நழுவ விட்ட சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ!
சோனி டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவுடன் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் முதல் இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியை வென்றவர் தமிழ்ப் பெண் அஞ்சனா. பெங்களூரில் வசிக்கும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இந்தியன் ஐடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். இதனால் இந்தமுறை நித்யஸ்ரீயும் அதேபோல …
மேலும் படிக்கஇந்தியாவுடன் போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு பேரிழப்பு ஏற்படும்: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மிரட்டல்
இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் அண்மையில் பேசுகையில் இந்திய ராணுவம் விரைவான, குறுகிய காலப் போருக்கு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் கடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் 50ஆவது ஆண்டு தினம், பாகிஸ்தான் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தேசியப் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகம் …
மேலும் படிக்கநமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்!
1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும். 2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு …
மேலும் படிக்கஅட்லாண்டிக் பெருங்கடலை நீந்திக் கடக்க முயற்சி
அட்லாண்டிக் பெருங்கடலை நீந்திக் கடக்க பலர் முயற்சித்திருந்தாலும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முழுமையாக யாரும் அதை இதுவரை நீந்திக் கடந்தது இல்லை. அப்படியான சாதனையை பிரிட்டனைச் சேர்ந்த பென் ஹூப்பர் முன்னெடுக்கவுள்ளார். மேற்கு ஆப்ரிக்க நாடான செனிகலின் தலைநகர் டாக்காரிலிருந்து தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்கு கடற்கரை நகரான நடாலுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் அவர் நீந்தவுள்ளார். இடைப்பட்ட தூரமான சுமார் 3500 கிலோமீட்டர்களை அவர் 120 …
மேலும் படிக்கமங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 40 பேர் படுகாயம்
கடலூர் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஏறக்குறைய 40 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, “திருச்சி ரயில்வே சரகத்துக்கு உட்பட்ட பூவனூர் எனும் இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 16859 வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் எதிர்பாராத விதமாக தடம் …
மேலும் படிக்கமகப்பேறு கால விடுமுறை 3 மாதத்திலிருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு
மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணிபுரியும் பெண்களுக்கு தாய்மை அடையும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு முந்தைய சிக்கலைவிட பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைக் கூட கவனிக்க முடியாமல் மூன்று மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருக்கிறது. …
மேலும் படிக்கசுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்கக் கோரி தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம்
சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்கக் கோரி, தமாகா சார்பில் இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைப்பதுடன், காலாவதியான சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி தமாகா சார்பில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையரகம் பூட்டு போடும் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் …
மேலும் படிக்கசிவகார்த்திகேயனின் “ரஜினிமுருகன்” டிரைலர்
சிவகார்த்திகேயனின் “ரஜினிமுருகன்” டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிக்க பொன்ராம் இயக்கியுள்ளார்.
மேலும் படிக்க30 பேருக்கு வழங்கப்பட்ட விஜபி பாதுகாப்பு வாபஸ்
நாராயண சாமி உள்ளிட்ட 30 பேருக்கு வழங்கப்பட்ட விஜபி பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக்கொண்டுள்ளது. இந்த பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார், உள்ளிட்டோரும் அடங்குவர். அந்த விஜபிகளுக்கு முன்பிருந்த அச்சுறுத்தல் தற்போதும் நீடிக்கிறதா என்பதை ஆய்வு செய்ததின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி