அமுரா

சென்னை சென்ட்ரலில் ரயிலை மறியல் போராட்டம்

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 சங்கங்களின் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் …

மேலும் படிக்க

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. கொழும்பு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று 386 ரன்கள்  வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 268 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி. அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, …

மேலும் படிக்க

புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணத்திற்கு, நெடுந்தீவுக்கும் இடையே உள்ள நயினார் தீவு என்ற இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று …

மேலும் படிக்க

ஈராக்கில் பழிக்குப் பழியாக 4 பேரை உயிருடன் எரித்துக் கொன்றனர் ஐஎஸ் தீவிரவாதிகள்

ஈராக்கில் 4 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் வீடியோ காட்சியை ஐஎஸ் தீவிரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சியில் 4 பேர் இரும்புச் சங்கிலியால் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், எரித்துக் கொல்லப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஈராக் அரசு படையினர் தங்கள் அமைப்பை சேர்ந்த 4 பேரை உயிருடன் எரித்து கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கவே, தற்போது 4 பேரை எரித்து கொன்றதாகவும் ஐஎஸ் தீவிரவாதிகள் …

மேலும் படிக்க

எம்.எம்.கல்பர்கி கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடகாவில் உள்ள தர்வாத்தில் உள்ள எம்.எம்.கல்பர்கியின் இல்லத்தில் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது கொலைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி, …

மேலும் படிக்க

“கடல் பறவைகள் தொண்ணூறு சதவீதமானவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக்”

உலகின் கடல் பறவைகளில் தொண்ணூறு சதவீதமானற்றின் வயிற்றுக்குள் சிறிதளவிலாவது பிளாஸ்டிக் இருக்கும் என்று நம்புவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அரை நூற்றாண்டாக தாங்கள் நடத்திய பல ஆய்வுகளை வைத்து தாம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தக் காலப்பகுதியில் கடலில் சேர்ந்துவிட்ட பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களின் அளவு வருடத்துக்கு எட்டு மில்லியன் டன்கள் என்ற அளவாக அதிகரித்துவிட்டது என ஒரு மதிப்பீடு கூறுகிறது. சிறு …

மேலும் படிக்க

இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க சட்ட ஆணையம் பரிந்துரை

இந்தியாவில் தீவிரவாதம் மற்றும் தேசத்துக்கு எதிராக போர் புரிந்ததாக குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் மரண தண்டனை அளிக்கப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஆணையம் இந்திய மத்திய அரசிடம் திங்கட்கிழமை தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அளித்தது. தமது இந்தப் பரிந்துரைகள் சமூகத்தில் அறிவுபூர்வமான, கொள்கை ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தாங்கள் நம்புவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதன் …

மேலும் படிக்க

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும். புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். …

மேலும் படிக்க

படேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் இளம் பெண்ணுடன் கும்மாளமா?

படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற முழக்கத்துடன் போரட்டம் நடத்தி வரும் குஜராத்தின் ஹர்திக் படேல், இளம் பெண் ஒருவருடன் கும்மாளம்போடும் வீடியோ காட்சி என்று ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஹர்திக் படேலும் அவரது 2 நண்பர்களும் இளம் பெண் ஒருவருடன் ஏடாகூடமாக கும்மாளம் அடிக்கும் வீடியோ என்று சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது இந்த வீடியோ காட்சிகள். ஆனால் இது அவர் இல்லை என்ற …

மேலும் படிக்க

நாட்டில் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: டி.எஸ்.ஆர். சுபாஷ்

கர்நாடகா மாநிலப் புரட்சி எழுத்தாளர் தொழர் எம்.எம்.கல்புர்கி மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகா மாநிலப் புரட்சி எழுத்தாளர் தொழர் எம்.எம்.கல்புர்கி மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது கருத்து சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டு உள்ளதையே உணர்ந்துகிறது. தந்தை பெரியார் வழியில் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து தனது எழுத்துக்கள் மூலம் பல வகையான புரட்சிகள் செய்தவர் …

மேலும் படிக்க