பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது முக்கிய நிகழ்வாக, ஐ.நா. சபையில் வரும் 27ஆம் தேதி உரையாற்றுகிறார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் குறித்து, தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் முதல்முறையாக, வரும் 26ஆம் தேதி …
மேலும் படிக்க87-ஆவது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் “லயர்ஸ் டைஸ்’ திரைப்படம் பரிந்துரை
87-ஆவது ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்தியா சார்பில் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள “லயர்ஸ் டைஸ்’ என்ற ஹிந்தித் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து டில்லியில், இந்தியத் திரைப்பட சம்மேளனத்தின் தலைமைச் செயலாளர் சுப்ரன் சென், பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 2015-ஆம் ஆண்டுக்கான 87-ஆவது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் “லயர்ஸ் டைஸ்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள …
மேலும் படிக்கமங்கள்யான் வெற்றி இந்தியர்கள் கொண்டாட வேண்டிய தருணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
இஸ்ரோ விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார். இஸ்ரோ சென்று விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய பிரதமர், அப்போது மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார். அப்போது, இந்திய அணி …
மேலும் படிக்கதமிழகத்தில் மின் கட்டணம் உயருகிறது: தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரை
ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான கட்டண விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. 2014-15ம் நிதியாண்டுக்கான மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 6,805 கோடி ரூபாய் அளவுக்கு மின் …
மேலும் படிக்கஇந்திய மங்கள்யான் , அமெரிக்க கியூரியாஸிட்டியும் ட்விட்டரில் நலம் விசாரிப்பு
Namaste, @MarsOrbiter! Congratulations to @ISRO and India’s first interplanetary mission upon achieving Mars orbit. — Curiosity Rover (@MarsCuriosity) September 24, 2014 Howdy @MarsCuriosity ? Keep in touch. I’ll be around. — ISRO’s Mars Orbiter (@MarsOrbiter) September 24, 2014 செவ்வாயை ஆராய்ச்சி செய்து வரும் நாசாவின் கியூரியாஸிடி விண்கலமும், செவ்வாய் ஆராய்ச்சியில் இணைந்திருக்கும் இந்தியாவின் மங்கள்யான் …
மேலும் படிக்கடெல்லி தேசிய பூங்காவில் இளைஞரை வெள்ளைப் புலி அடித்துக் கொன்றது
டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் தவறி புலியின் கூண்டில் விழுந்த இளைஞர் ஒருவரை வெள்ளை புலி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து நேரில் கண்ட ஒருவர் கூறும்போது, “உயிரியல் பூங்காவில் சுற்றுலாவுக்காக வந்த இளைஞர் ஒருவர், 12.30 மணி அளவில் அங்கு உள்ள அரிய வகை வெள்ளைப் புலி இருக்கும் பகுதிக்கு தனது நண்பருடன் வந்திருந்தார். தடுப்புகளுக்குள் …
மேலும் படிக்கஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு தேதியை மாற்ற முடியாது: பெங்களூர் நீதிபதி டி’குன்ஹா
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதியை மாற்ற வேண்டும் என பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி விடுத்த கோரிக்கையை நீதிபதி டி’குன்ஹா நிராகரித்துவிட்டார். எக்காரணம் கொண்டும் தீர்ப்பு தேதியை மாற்ற முடியாது எனவும் அன்றைய தினம் உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கின் …
மேலும் படிக்க214 நிலக்கரிச் சுரங்கங்கள் உரிமம் ரத்து: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கடந்த 1993 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட 214 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1993 – 2011 இடையே வழங்கப்பட்ட 218 நிலக்கரிச் சுரங்க உரிமம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த உரிமங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இவற்றை ரத்து செய்வது குறித்து பதிலளிக்கும்படி மத்திய …
மேலும் படிக்ககருணாநிதியை சந்தித்தார் ராமதாஸ்: மறுபடியும் கூட்டணியா?
தி.மு.க தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ளது அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை காலை சந்தித்தார். தனது பேத்தியின் திருமண பத்திரிகையை கருணாநிதிக்கு கொடுத்த ராமதாஸ், திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “திமுக தலைவர் கருணாநிதி அரசியல் நாகரிகம் தெரிந்தவர். தமிழகத்தில் அரசியல் நாகரிகத்தை கடைபிடிக்கும் தலைவர். அதனாலேயே எங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு தவறாமல் அவரை அழைக்கிறோம்” …
மேலும் படிக்கஅவதூறு வழக்குகள்: சுப்ரமணியசாமி அக்டோபர் 30–ந்தேதி நேரில் ஆஜராக சம்மன்
பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தனது டூவிட்டர் இணையதளம் பக்கத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறான கருத்துக்களை குறிப்பிட்டு கடந்த 17–ந்தேதி மற்றும் 20–ந்தேதி கட்டுரைகள் வெளியிட்டார். இந்த 2 கட்டுரைகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ள சுப்ரமணியசாமி மீது ஜெயலலிதா சார்பில் 2 கிரிமினல் வழக்குகள் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 2 வழக்குகளும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த …
மேலும் படிக்க