அமுரா

சமஸ்கிருத வாரம் ஏற்புடையது அல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

CBSC பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசு, மத்திய மனித …

மேலும் படிக்க

MH17 மலேசிய விமான பயணியின் ஃபேஸ்புக் ‘ஜோக்’ நிஜமான சோகம்

கார் பான் (Cor Pan) என்ற நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞர் தனது மொபைலில் பிடித்த எம்.ஹெச்.17 விமானத்தின் புகைப்படத்தை இணைத்து, அதில் “ஒருவேளை இது மாயமானால், விமானம் இப்படித்தான் இருந்தது என்பதை அறிவீர்” எனும் பொருள்தரும் பதிவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார். ஆனால், ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கிழக்கு உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் நொறுங்கி விழுந்தது. அதில், பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர். அதில், தனது காதலியுடன் …

மேலும் படிக்க

குறும்பட செலவில் எடுக்கப்பட்டு கோடியை வசூல் செய்த திரைப்படம்

கோடிகளை செலவு செய்து எடுக்கும் படங்களே இன்றைக்கு காலை வாரிவிடும் நிலையில் வெறும் லட்சங்களை கொண்டு தயாரான ஒரு படம் கோடி ரூபாய் வசூலை தொட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்புக்கு பெயர் போன ராம்கோபால்வர்மா தான் இந்தப் படத்தை தயாரித்து இருக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘ஐஸ்கிரீம்’. நவ்தீவ், தேஜஸ்வி, சந்தீப்தி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஒரு பங்களாவிற்குள்ளே நடைபெறுவதுபோல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் இரண்டு லட்சத்து …

மேலும் படிக்க

ஏ.ஆர் ரகுமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அமெரிக்கா பல்கலைகழகம்

இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைப்பள்ளியான பெர்க்லீ, வரும் அக்டோபர் 24-ஆம் தேதி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், “இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பெர்க்லீ இசைப்பள்ளி வழங்கும் விருதினைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மேலும் வருங்கால இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக எனது பெயரில் உதவித் தொகை வழங்கவுள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்’ …

மேலும் படிக்க

மலேசிய விமானம் எரியும் வீடியோ:

நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ஏவுகணையால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகியுள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 295 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று மதியம் 12.10 மணிக்கு கிளம்பியது. விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ஏவுகனையால் தாக்கினர். இதையடுத்து விமானம் ஷக்தர்ஸ்க் என்ற …

மேலும் படிக்க

மலேசியாவுக்கு இது மோசமான வருடம்: பிரதமர் நஜீப் ரஸாக் வருத்தம்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுடப்பட்டு விபத்து ஏற்பட்டதாக வந்த செய்தி அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்திருந்தார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் தெரிவித்தபோது, இந்த விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் இது குறித்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டிருந்த போது, அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் அழைத்து வருத்தம் …

மேலும் படிக்க

மோடியின் விமானத்துக்கு குறி வைக்கப்பட்டதா? சுப்ரமணிய சுவாமி சந்தேகம்

பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் இலக்கு வைக்கப்பட்டதோ என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணிய சுவாமி சந்தேகம் கிளப்பியிருக்கிறார். இது தொடர்பாக தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய எதிரிகள் இருப்பது ஒன்றும் ரகசியமானது அல்ல. அண்மையில்தான் பிரிக்ஸ் மாநாடு முடிந்தது. அம்மாநாட்டின் மூலம் சர்வதேச புவிசார் அரசியலில் உலக பொருளாதாரத்தில் கோலோச்சுகிற நாடுகளுக்கு சவால்விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டினால் ஓஐசியானது …

மேலும் படிக்க