அமுரா

மின்வெட்டு பிரச்சனையில், தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது – டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.05.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில், “முந்தைய தி.மு.க. ஆட்சியினரால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, “நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்” என செய்யாத சாதனைக்காக தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், …

மேலும் படிக்க

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு நிபந்தனை, ஒரு மாதம் கெடு ஜி7 நாடுகள் கடும் எச்சரிக்கை

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை நிறைவேற்றா விட்டால், அந்நாட்டின் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான், இத்தாலி, கனடா ஆகிய வளர்ச்சியடைந்த நாடுகள் ஜி8 என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தன. இந்த அமைப்பின் மாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெறவிருந்தது. ஆனால், உக்ரைன் நாட்டில் பிரிவினைவாத தீவிரவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதால் …

மேலும் படிக்க

உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் ரோபோ ஜப்பானில் அறிமுகம்

மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் பெப்பர் என்ற புதிய ரோபோவை ஜப்பானின் சாப்ட் பேங்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தையான ஜப்பானில், செயற்கை நுண்ணறிவு அமைப்பும், உணர்ச்சிகளை அறியும் ஒரு புதிய தொழில்நுட்பமும் இந்த புதிய ரோபோவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த ரோபோவினால் ஒருவரின் சைகைகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், குரல் தொனிகள் போன்றவற்றை அறிந்துகொள்ள இயலும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் தொடர்பு …

மேலும் படிக்க

வெளியே கசிந்த கத்தி படத்தின் கதை

அதாவது ஹீரோ ,வில்லன்னு ரெண்டு கேரக்டர்ல விஜய் நடிக்கிறாரு. இதுல வில்லன் விஜய் அப்பாவி குழந்தைளை பணையக்கைதியா கடத்தி துன்புறுத்துறாரு கூடவே கவருமெண்டுக்கு செக் வேற வைக்க? குழந்தைகள எப்புடி கண்டு பிடுச்சு ஹீரோ விஜய் காப்பாத்திட்டு வராருங்கறது மிச்ச ஸ்டோரி,  இதுல வில்லன் விஜய் சிறப்பா நடிச்சிருக்காருன்னு கத்தி படக்குழு சொல்லுதாம். விஜயும், தான் நடிச்ச காட்சிகளை பார்த்து பார்த்து ரசிக்கிறாராம். நம்ம முடியலையோ! இதுதான் கதையா? அதை இயக்குனர்தான் …

மேலும் படிக்க

வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் மனைவி இந்து வின் உருக்கமான கவிதை

மேஜர் முகுந்த் வரதரஜானின் காதல் மனைவி இந்து ரிபெக்கா வர்கீஸ். கேரளத்தைச் சேர்ந்த ரிபெக்கா, தனது கணவரின் வீர மரணத்தால்,  நாட்டுக்காக அவர் செய்த தியாகத்தால் பெருமைப்படுகிறார். ஆனால் ஒரு சாதாரண மனைவியாக, அவர் தனது கணவரின் மரணத்தால் எந்த அளவுக்கு உடைந்து போயிருக்கிறார் என்று அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தான் முகுந்த் மீது வைத்திருந்த அன்பை, பாசத்தை, நேசத்தை ஆங்கிலத்தில் தனது …

மேலும் படிக்க

எனக்கும் பெண் ஜர்னலிஸ்ட் அம்ரிதாவுக்கும் உள்ள தொடர்பு உண்மையே: காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் ஒப்புதல்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் பொதுச்செயலருமான 67 வயது திக்விஜய்சிங் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதா ராய்க்கும் தமக்கும் பழக்கமிருக்கிறது.அவரை திருமணம் செய்ய இருக்கிறேன் என்று அறிவித்துள்ளார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதாவுக்கும் திக்விஜய்சிங்குக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாகவும் இது தொடர்பான சில புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக இணையதளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனால் …

மேலும் படிக்க

“அக்னி நட்சத்திரம்” கத்திரி வெயில் 113 டிகிரியை தாண்டும் – வானிலை மையம் அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டு கோடை வெயில் 113 டிகிரி வரை எட்டக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “அக்கினி நட்சத்திரம் அல்லது “கத்தரி வெய்யில் என்று சுட்டெரிக்கும் காலம். சித்திரை மாதத்தின் கடைசி பின் பத்து நாட்களிலும், வைகாசிமுதல் பதினைந்து நாட்களிலும் அதிகமாக இருக்கும் மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்குகிறது. இது மே 28 ம் தேதி வரை நீடிக்கும். அதற்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை எட்டிவிட்டது. …

மேலும் படிக்க

சென்னையில் மே 1 முதல் 2 மணி நேரம் மின்தடை – உங்கள் ஏரியாவில் எப்போது மின் தடை அறிந்து கொள்ளுங்கள்

மே 1ம் தேதி முதல் சென்னையில் 2 மணி நேர மின் தடை அமலுக்கு வருகிறது. மின்சார வாரியம் அறிவித்துள்ள, சுழற்சி முறையில் மின் தடை அமலாகும் பகுதிகளின் விவரம் : காலை 8 மணி முதல் 10 மணி வரை புரசைவாக்கம் (ஒரு பகுதி), டவுட்டன், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), அண்ணா சாலை (ஒரு பகுதி), கதீட்ரல் சாலை (ஒரு பகுதி), தியாகராய நகர், பாண்டி பஜார், தெற்கு …

மேலும் படிக்க

தாமரை சின்னத்துடன் பேட்டியளித்த மோடி மீது நடவடிக்கை- தேர்தல் ஆணையம் உத்தரவு

காந்திநகர்: ஏப்:30, 7வது கட்ட லோக்சபா தேர்தல் இன்று நாடு முழுவதும் 89 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் குஜராத்தின் 26 தொகுதிகளும் அடங்கும். குஜராத்தின் காந்திநகரில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிடுகிறார். அங்கு தனது தாயாருடன் சென்று நரேந்திர மோடி இன்று காலை வாக்களித்தார். அதன் பின்னர் வாக்குச் சாவடிக்கு வெளியே தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். இதற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் …

மேலும் படிக்க