அமுரா

பொறியியல் சேர்க்கைக்கான ரேண்டம் எண் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது

பொறியியல் கலந்தாய்வு, ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாணவர் சேர்க்கை மற்றும் நுழைவுத் தேர்வு மையத்தில் காலை 9.45 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் ரேண்டம் எண்ணை வெளியிட்டார். மாணவர்கள் ரேண்டம் எண்களை, பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.annauniv.edu ல் தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர …

மேலும் படிக்க

சென்னை முகப்பேரில் நிர்வாணமாக “பாய்ஸ்” சினிமா பாணியில் ஓடிய வாலிபரால் பரபரப்பு

சென்னை: முகப்பேர், நொளம்பூர் அப்பார்ட்மெண்ட்கள் நிறைந்த கோகுலம் ஃபேஸ் 1 பகுதியில் இரவு 8.30 மணியளவில் ஒரு வாலிபர் “பாய்ஸ்” சினிமா ஹீரோ பாணியில் நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படடைத்துள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்த போது, அதிகமான போதையில் இருந்த அவர் முன்னுக்கு பின்னாக பேசியுள்ளார். ஏன் அவர் இப்படி செய்தார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. …

மேலும் படிக்க

“அம்மா உப்பு” நாளை முதல் விற்பனைக்கு வருகிறது

அம்மா உப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் மலிவு விலையிலான அம்மா உப்பு நாளை முதல் விற்பனைக்கு வருகிறது. இதில் இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. முதல் வகை உப்பு ரூ.14க்கும் (வெளி மார்க்கெட்டில் ரூ.22க்கு விற்கப்படுகிறது), 2–வது வகை …

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த திருநாள். எனவே அன்றைய தினம் அவரை வழிபட்டால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும். வைகாசி விசாக திருவிழா அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றாலும், அறுபடை வீடுகளளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெகு விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படும். விழாவையொட்டி …

மேலும் படிக்க

மக்கள் விழிப்புணர்வு பெற உங்கள் உதவி தேவை – காவல்துறை உதவி ஆணையர் வேண்டுகொள்.

நாலு பேருக்கு நன்மை செஞ்சா நல்லவங்களை விடமாட்டாங்க…. என்ற பாடல் வரிகளை பொய்யாக்கி வருவதில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன் தங்கள் பணியில் அர்ப்பணம் செய்து வருகின்றனர் என்பதற்கு அடையாளம்தான் மணலி புது எம்ஜிஆர் நகரில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்கள். மணலி, மாதவரம் நகரியம் (PPFA) தலைவர் எஸ். மாபு பாஷா தலைமையில் மணலி நகரியம் (PPFA) …

மேலும் படிக்க

ப்ளீஸ் – பாடாதே சிம்பு நிறுத்திடு – சௌந்தர்யா ரஜினிகாந்த்

விஜய் டி.வியின் ‘காபி வித் டி.டி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, சிம்புவிடம் நீங்கள் என்ன கேட்க நினைக்கிறீர்கள் என செளந்தர்யாவிடம் கேட்டபோது, ‘சிம்பு, நீ பாடறதை நிறுத்திடேன்,” என்றார். அந்த நிகழ்ச்சி நேற்றிரவு விஜய் டி.வியில் ஒளிபரப்பான உடன், செளந்தர்யாவின் ட்விட்டர் தளத்தில் சிம்பு ரசிகர்கள் அவருக்கு எதிரான கமெண்டுகளை பதிவு செய்தனர். இச்செயல் குறித்து …

மேலும் படிக்க

அனைத்து குடிமக்களின் உரிமையையும் புதிய அரசு பாதுகாக்கும் – குடியரசுத் தலைவர் உரை

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் இன்று காலை துவங்கியது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுமித்ரா மகாஜனுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நடந்து முடிந்துள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்கிறது. நிலையான அரசு அமைய …

மேலும் படிக்க

சென்னையில் விடிய விடிய மழை – மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இரவும் முழுவதும் பெய்து வரும் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  கோயம்பேடு, வடபழனி, கிண்டி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், தி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. வெயில் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 9 ஆவது முறையாக வென்று நடால் சாதனை

ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒன்பதாவது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் நடால், செர்பியாவின் நோவாக் யாக்கோவிச்சை 3-6, 7-5, 6-2, 6-4 எனும் செட்கணக்கில் வென்றார். ஒன்பது முறை இப்போட்டியை வென்றது மட்டுமன்றி, அதை தொடர்ச்சியாக ஐந்து முறையும் வென்று ரஃபேல் நடால் புதியதோர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆறு முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் …

மேலும் படிக்க

முழு உற்பத்தித் திறனான1000 மெகா வாட்டை எட்டியது கூடங்குளம் முதல் அணுஉலை

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை அதன் முழு உற்பத்தித் திறனை எட்டியது. சரியாக பிற்பகல் 1.20 மணிக்கு அணுஉலை 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறுகையில்: “கூடங்குளம் அணுஉலையில் மூன்று இலக்கங்களில் இருந்த மின் உற்பதித் திறன் 4 இலக்கத்தை எட்டிய நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்துனை ஆண்டுகளாக எங்களுக்கு உறுதுணையாக …

மேலும் படிக்க