அமுரா

வாக்களிக்க வரிசையில் நிற்காமல் சென்ற மத்திய அமைச்சர் சிரஞ்சீவி : தடுத்து நிறுத்திய வாலிபர்

மத்திய அமைச்சர் சிரஞ்சீவி தன் குடும்பத்தினருடன் வரிசையில் நிற்காமல் வாக்குச்சாவடிக்குள் செல்ல முயன்றதை வாக்காளர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதி வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்தார் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி. ஆனால் அங்கு நீண்ட வரிசை நின்றது. சிறிது நேரம் வரிசையில் காத்திருந்த சிரஞ்சீவி. பின்னர் வரிசையில் இருந்து விலகிச் சென்று வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய வாக்காளர் …

மேலும் படிக்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை

நாகர்கோவில்: ஏப், 30 கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், பூதப்பாண்டி, தக்கலை, குளச்சல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததது. சுமார் 12.30 மணியளவில் ஆரப்பித்த மழை 2 மணி வரை பெய்ததது. தற்போது சற்று ஓய்ந்துள்ளது. இந்த மழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெயில் தனிந்து குளு குளு சூழல் உருவாகியுல்ளது, இதனால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

டியுஜே சார்பில் முப்பெரும் விழா – உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா, தி.க.சி படத்திறப்புவிழா

[pullquote] டியுஜே சார்பில் முப்பெரும் விழா – உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா, தி.க.சி படத்திறப்புவிழா[/pullquote] உலக பத்திரிகைகள் தின விழா, மே தின விழா  மற்றும் ‘’சாகித்ய அகாதமி“ விருது பெற்ற திறனாய்வுத் தென்றல் மறைந்த தி.க.சிவசங்கரன் (தி.க.சி) அவர்களின் படத் திறப்பு விழா!  என முப்பெரும் விழாவாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ்  அமைப்பின் சார்பில் சென்னை பிரஸ் கிளப்பில் (எம்.எல்.ஏ.ஹாஸ்டல் அருகில், …

மேலும் படிக்க

ரஜினியின் அடுத்த படம் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’

கோச்சடையான் படத்திற்குபிறகு ரஜினி நடிப்பாரா? என பல யூகங்கள் எழுந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி புதிய படத்தில் நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு ‘லிங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. [pullquote] எந்திரன் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ராணா என்ற படத்தில் கமிட்டானார் ரஜினி.  இப்படத்தின் பூஜை நடைபெற்ற அன்றே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். …

மேலும் படிக்க

சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார் மோடி: பிரியங்கா காந்தி

[pullquote] குழந்தைத்தனமாக பேசாமல், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நீங்கள், அந்த பதவிக்கான மதிப்பை அளிக்க வேண்டும்[/pullquote] அமேதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஆதிரித்து, அவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று பேசும்போது, “ராகுல் காந்தி எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர். சில எதிர்க்கட்சி தலைவர்கள் இங்கே வருகின்றனர். அவர்கள் தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். ராகுல் குறித்து அவர்கள், “இளவரசர்” என்றும் மற்றொரு சமயத்தில் ‘காமெடியன்’ என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். …

மேலும் படிக்க

நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன்

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தனது மனைவியின் பெயரை மோடி அறிவிக்க காரணம் என்ன? என்று விசாரிக்கும் போது காஞ்சி காமாட்சியம்மன் உத்தரவினாலேயே மோடி தனது மனைவியின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் …

மேலும் படிக்க

ஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய பெண் அதிபர் ஒரு விபசாரி – வட கொரியா

“ஒபாமா ஒரு புரோக்கர், தென் கொரிய பெண் அதிபர் ஒரு விபசாரி” என வட கொரியா பகிரங்கமாக தாக்கி உள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் தென் கொரியா தலைநகர் சியோலுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் ஷியுன் ஹையை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, “அண்டை நாடான வட கொரியா …

மேலும் படிக்க

சென்னை சேப்பாக்கத்தில் 33 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் வீட்டில் தங்கம் இருப்பதாக சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் இன்று காலை அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 33 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் இருந்த தமீம்அன்சாரி, அவரது தம்பி ரகுமான் ஆகியோரிடம் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

மேலும் படிக்க

வெற்றி பெற்றதாக போஸ்டர் வைத்தது தொடர்பாக அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு: தேர்தல் ஆணையர் பிரவீண்குமார்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இன்று  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தலில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, வெற்றி பெற்றதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர் அடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார். மேலும் காஞ்சிபுரத்தில் 1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக போஸ்டர் அடித்த விவகாரத்தில் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக நேற்று காஞ்சிபுரம் நகர்மன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட …

மேலும் படிக்க

1,68,099 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி – காஞ்சிபுரத்தில் தேர்தல் முடிவு வரும் முன்பே வெற்றி அறிவிப்பு பேனரால் பரபரப்பு

தேர்தல் முடிவு அறிவிக்கப்படாத நிலையில், காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அதிமுகவினர் வைத்த வாழ்த்து பேனரால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில், வழக்கறுத்தீசுவர் கோயில் அருகே அம்மா அவர்களின் ஆசியுடன் கழக தோழர்கள் கடுமையாக உழைத்து 1,68,099 வாக்குகள் அதிகம் பெற்று மாபெறும் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் அவர்களை வாழ்த்துகிறோம் என்று பேனர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழகம் …

மேலும் படிக்க