கல்வி

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த …

மேலும் படிக்க

ஐஏஎஸ் முதல்நிலைத் தெர்வு – இலவசப் பயிற்சி மையத்தில் சேர நவம்பர் 23-ம் தேதி நுழைவுத் தேர்வு

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு நடத்தும் இலவசப் பயிற்சி மையத்தில் சேர நவம்பர் 23-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு அக்டோபர் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இங்கு 225 பேருக்கு முழு நேரமாகவும், 100 பேருக்கு பகுதி நேரமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொதுப்பிரிவினரைத் தவிர மற்றவர்களுக்கு பயிற்சி, தங்கும் இடம், உணவு வசதி அனைத்தும் இலவசம். பொதுப்பிரிவினர் பயிற்சி கட்டணமாக ரூ.1000 …

மேலும் படிக்க

அதிக மதிப்பெண் வாங்கிய ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: இந்தியன் ஆயில், எல்ஐசி அறிவிப்பு

SSLC, +-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக எல்ஐசி, இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தனது பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தற்போது ஐடிஐ, பாலி டெக்னிக் தொழில்கல்வி படிப்புகள் மற்றும் கலை அறிவியல் பட்டம், பொறியியல், மருத்துவ …

மேலும் படிக்க

வட சென்னை ஸ்ரீ ராமகிருஷ்னா மடம் தேசியப் பள்ளியின் ஆண்டு விழா

வட சென்னை ஸ்ரீ ராமகிருஷ்னா மடம் தேசியப் பள்ளியின் 109 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தது. இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியை எஸ்.வி. சரஸ்வதி அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர்கள் ஸ்ரீ வித்யானந்தர் மகராஜ், ஸ்ரீமத் கௌதமானந்த மகராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் படிக்க

TNPSC குரூப் 2 – இன்டர்வியூ போஸ்ட் முடிவுகள் வெளியீடு

கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி நடந்த குரூப் 2 – இன்டர்வியூ போஸ்ட் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. TNPSC இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். முதன்மைத் தேர்வு(Main Exam)9  08.11.2014 அன்று நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tnpsc.gov.in/results/csse2K12_seldoc_final.pdf

மேலும் படிக்க

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்: பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், …

மேலும் படிக்க

ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என பெயர் மாற்றம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆசிரியராக பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் …

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் ஆசிரியர் தின உரையை பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நாடு முழுவதிலும் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் பலவேறு நிகழ்ச்சிகளில் மாணவ மாணவியர்களிடம் உரையாற்றி வந்துள்ளார். எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய இவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். நாட்டில் முதல் முறையாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்காகவும், அன்றைய தினம் பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் வீடியோ …

மேலும் படிக்க

பத்து மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17-ஆம் தேதியும் நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை பொதுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை …

மேலும் படிக்க

GATE – 2015: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க தயாராகுங்க?

முதுநிலைப் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் GATE – 2015-ஆம் ஆண்டுக்கான தேர்வில் அனைத்து நடைமுறைகளும் ஆன்-லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும். விண்ணப்பிக்க அக்டோபர் 1 கடைசித் தேதியாகும். முதுநிலை பொறியியல் படிப்பை மத்திய அரசின் உதவித்தொகையுடன் மேற்கொள்ள “கேட்’ தேர்வில் தகுதி பெறுவது அவசியம். சில கல்லூரிகள் இந்தத் தேர்வில் தகுதி பெற்றவர்களை மட்டுமே, முதுநிலை பொறியியல் படிப்புகளில் …

மேலும் படிக்க