மொபைலில் மாதாந்திர ரயில் சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் எடுக்கும் வசதி அடுத்த சில நாட்களில் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். டில்லி பல்வால் புறநகர் ரயில் பிரிவில், செல்போனில் சாதாரண ரயில் டிக்கெட் பெறும் முறையை ரயில்வே துறை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த சில நாட்களில் சென்னை, மும்பை, டில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் மாதாந்திர சீசன் …
மேலும் படிக்கஇமாச்சலில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி, 15 க்கும் மேற்பட்டோர் காயம்
இமாச்சல பிரதேசத்தில், 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலம் ரெகோங் பியோ என்ற இடத்தில் இருந்து ராம்பூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தியா-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் மலை மீது நாத்பா என்ற இடத்தில் அந்த பேருந்து சென்ற போது திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. சட்லெஜ் …
மேலும் படிக்கசென்னை சென்ட்ரலில் ரயிலை மறியல் போராட்டம்
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 சங்கங்களின் சார்பில், மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் …
மேலும் படிக்கபுதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணத்திற்கு, நெடுந்தீவுக்கும் இடையே உள்ள நயினார் தீவு என்ற இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று …
மேலும் படிக்கஎம்.எம்.கல்பர்கி கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடகாவில் உள்ள தர்வாத்தில் உள்ள எம்.எம்.கல்பர்கியின் இல்லத்தில் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது கொலைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி, …
மேலும் படிக்க“கடல் பறவைகள் தொண்ணூறு சதவீதமானவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக்”
உலகின் கடல் பறவைகளில் தொண்ணூறு சதவீதமானற்றின் வயிற்றுக்குள் சிறிதளவிலாவது பிளாஸ்டிக் இருக்கும் என்று நம்புவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அரை நூற்றாண்டாக தாங்கள் நடத்திய பல ஆய்வுகளை வைத்து தாம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தக் காலப்பகுதியில் கடலில் சேர்ந்துவிட்ட பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களின் அளவு வருடத்துக்கு எட்டு மில்லியன் டன்கள் என்ற அளவாக அதிகரித்துவிட்டது என ஒரு மதிப்பீடு கூறுகிறது. சிறு …
மேலும் படிக்கஇந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க சட்ட ஆணையம் பரிந்துரை
இந்தியாவில் தீவிரவாதம் மற்றும் தேசத்துக்கு எதிராக போர் புரிந்ததாக குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் மரண தண்டனை அளிக்கப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஆணையம் இந்திய மத்திய அரசிடம் திங்கட்கிழமை தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அளித்தது. தமது இந்தப் பரிந்துரைகள் சமூகத்தில் அறிவுபூர்வமான, கொள்கை ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தாங்கள் நம்புவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதன் …
மேலும் படிக்கபடேல் இனத்தலைவர் ஹர்திக் படேல் இளம் பெண்ணுடன் கும்மாளமா?
படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற முழக்கத்துடன் போரட்டம் நடத்தி வரும் குஜராத்தின் ஹர்திக் படேல், இளம் பெண் ஒருவருடன் கும்மாளம்போடும் வீடியோ காட்சி என்று ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஹர்திக் படேலும் அவரது 2 நண்பர்களும் இளம் பெண் ஒருவருடன் ஏடாகூடமாக கும்மாளம் அடிக்கும் வீடியோ என்று சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது இந்த வீடியோ காட்சிகள். ஆனால் இது அவர் இல்லை என்ற …
மேலும் படிக்கநாட்டில் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை: டி.எஸ்.ஆர். சுபாஷ்
கர்நாடகா மாநிலப் புரட்சி எழுத்தாளர் தொழர் எம்.எம்.கல்புர்கி மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகா மாநிலப் புரட்சி எழுத்தாளர் தொழர் எம்.எம்.கல்புர்கி மதவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது கருத்து சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டு உள்ளதையே உணர்ந்துகிறது. தந்தை பெரியார் வழியில் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து தனது எழுத்துக்கள் மூலம் பல வகையான புரட்சிகள் செய்தவர் …
மேலும் படிக்கஅமிதாப் பச்சனின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டது
பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. டிவிட்டர் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருபவர்களில் நடிகர் அமிதாப்பச்சனும் ஒருவர். இவரது டிவிட்டர் பக்கத்தினை சுமார் ஒன்றரை கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக மும்பை போலீசில் அமிதாப் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அமிதாப்பின் டிவிட்டர் பக்கம் சரி செய்யப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி