செய்திகள்

அரசியல் அரைவேக்காடு யார்?- கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, “அரைவேக்காடு யார்?” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது” என்ற பழமொழிக்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் …

மேலும் படிக்க

அவசர நேரத்தில் உங்களை காப்பாற்றும் மொபைல் ICE (In Case of Emergency) எண்.

நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும், மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் …

மேலும் படிக்க

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: ஒரு நபர் ஆணையத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பு

சென்னை: சென்னை போரூர் அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் நடந்த கட்டட விபத்தை விசாரிக்கும் ஒரு நபர் ஆணையத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்: சென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து, இதுவரை 61 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீதிபதி ரெகுபதி …

மேலும் படிக்க

போரூர் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 61, தோண்டத்தோண்ட அழுகிய நிலையில் பிணங்கள்

போரூர் கட்டிட விபத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. தோண்டத்தோண்ட அழுகிய நிலையில் பிணங்களாக மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28–ந் தேதி நடைபெற்ற கோர கட்டிட விபத்தில் நேற்று முன்தினம் இரவு வரை நடைபெற்ற மீட்பு பணிகளில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடனும், 50 பேர் பிணங்களாகவும் …

மேலும் படிக்க

ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை – சிறப்பு விமானம் மூலம் நாளை கொச்சி வருகை

உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். 46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி கூடலூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடி. மற்றவர்கள் …

மேலும் படிக்க

டெல்லி–ஆக்ரா இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

இந்தியன் ரெயில்வேயில் அதிவேக ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக டெல்லி–ஆக்ரா இடையே அதிவேக ‘செமி புல்லட்’ ரெயில் சோதனை நேற்று நடந்தது. இதற்காக 5,400 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் 10 பெட்டிகளுடன் புறப்பட்டது. இதில் 2 ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த ரெயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்தது. டெல்லி ரெயில் நிலையத்தில் காலை 11.15 மணிக்கு புறப்பட்ட …

மேலும் படிக்க

மவுலிவாக்கம் கட்டிட விபத்து பலி 58 ஆக அதிகரிப்பு: விசாரணைக் குழு அமைத்து முதல்வர் உத்தரவு

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது. கடந்த 28-ம் தேதி மாலை மவுலிவாக்கத்தில் 11 அடுக்க மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. தொடர்ந்து 6-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) மதியம் வரை ஒரு குழந்தை உள்பட 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. …

மேலும் படிக்க

பாஜகவை அமெரிக்க அரசு வேவு பார்த்த விவகாரம்: இந்தியா கண்டிப்பு

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய பிரதான எதிர்கட்சியான பாஜகவை அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு அமைப்பு வேவு பார்த்ததாக வெளியான செய்திகளால், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து புகார் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியாவால் ஏற்கமுடியாதவை என்று வர்ணித்திருக்கும் இந்திய அதிகாரிகள் இனிமேல் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று அமெரிக்கா உறுதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அரசின் புலனாய்வுத்துறையால் வேவு …

மேலும் படிக்க

பிரேதப் பரிசோதனை அறிக்கை திருத்தப்பட்டதா? சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் சாவில் புதிய திருப்பம்

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் சாவு இயற்கையாக நடந்ததாக அறிக்கை தயாரிக்கும்படி பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர் குழு தலைவருக்கு நெருக்கடி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுனந்தா புஷ்கரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை திருத்தும்படி முன்னாள் மத்திய அமைச்சர்கள் சசிதரூர் மற்றும் குலாம் நபி ஆசாத் தம்மை வற்புறுத்தியதாக எய்ம்ஸ் மருத்துவர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சில மாதங்களுக்கு முன்னர் …

மேலும் படிக்க

கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது:சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். கச்சத் தீவு பகுதி உள்பட தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதல்களில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று தனது …

மேலும் படிக்க