செய்திகள்

சென்னை முகப்பேரில் நிர்வாணமாக “பாய்ஸ்” சினிமா பாணியில் ஓடிய வாலிபரால் பரபரப்பு

சென்னை: முகப்பேர், நொளம்பூர் அப்பார்ட்மெண்ட்கள் நிறைந்த கோகுலம் ஃபேஸ் 1 பகுதியில் இரவு 8.30 மணியளவில் ஒரு வாலிபர் “பாய்ஸ்” சினிமா ஹீரோ பாணியில் நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படடைத்துள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்த போது, அதிகமான போதையில் இருந்த அவர் முன்னுக்கு பின்னாக பேசியுள்ளார். ஏன் அவர் இப்படி செய்தார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. …

மேலும் படிக்க

“அம்மா உப்பு” நாளை முதல் விற்பனைக்கு வருகிறது

அம்மா உப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் மலிவு விலையிலான அம்மா உப்பு நாளை முதல் விற்பனைக்கு வருகிறது. இதில் இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. முதல் வகை உப்பு ரூ.14க்கும் (வெளி மார்க்கெட்டில் ரூ.22க்கு விற்கப்படுகிறது), 2–வது வகை …

மேலும் படிக்க

மக்கள் விழிப்புணர்வு பெற உங்கள் உதவி தேவை – காவல்துறை உதவி ஆணையர் வேண்டுகொள்.

நாலு பேருக்கு நன்மை செஞ்சா நல்லவங்களை விடமாட்டாங்க…. என்ற பாடல் வரிகளை பொய்யாக்கி வருவதில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன் தங்கள் பணியில் அர்ப்பணம் செய்து வருகின்றனர் என்பதற்கு அடையாளம்தான் மணலி புது எம்ஜிஆர் நகரில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்கள். மணலி, மாதவரம் நகரியம் (PPFA) தலைவர் எஸ். மாபு பாஷா தலைமையில் மணலி நகரியம் (PPFA) …

மேலும் படிக்க

அனைத்து குடிமக்களின் உரிமையையும் புதிய அரசு பாதுகாக்கும் – குடியரசுத் தலைவர் உரை

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் இன்று காலை துவங்கியது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுமித்ரா மகாஜனுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நடந்து முடிந்துள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்கிறது. நிலையான அரசு அமைய …

மேலும் படிக்க

சென்னையில் விடிய விடிய மழை – மக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இரவும் முழுவதும் பெய்து வரும் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  கோயம்பேடு, வடபழனி, கிண்டி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், தி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரவு விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது. வெயில் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

முழு உற்பத்தித் திறனான1000 மெகா வாட்டை எட்டியது கூடங்குளம் முதல் அணுஉலை

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை அதன் முழு உற்பத்தித் திறனை எட்டியது. சரியாக பிற்பகல் 1.20 மணிக்கு அணுஉலை 1000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறுகையில்: “கூடங்குளம் அணுஉலையில் மூன்று இலக்கங்களில் இருந்த மின் உற்பதித் திறன் 4 இலக்கத்தை எட்டிய நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்துனை ஆண்டுகளாக எங்களுக்கு உறுதுணையாக …

மேலும் படிக்க

வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் மனைவி இந்து வின் உருக்கமான கவிதை

மேஜர் முகுந்த் வரதரஜானின் காதல் மனைவி இந்து ரிபெக்கா வர்கீஸ். கேரளத்தைச் சேர்ந்த ரிபெக்கா, தனது கணவரின் வீர மரணத்தால்,  நாட்டுக்காக அவர் செய்த தியாகத்தால் பெருமைப்படுகிறார். ஆனால் ஒரு சாதாரண மனைவியாக, அவர் தனது கணவரின் மரணத்தால் எந்த அளவுக்கு உடைந்து போயிருக்கிறார் என்று அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தான் முகுந்த் மீது வைத்திருந்த அன்பை, பாசத்தை, நேசத்தை ஆங்கிலத்தில் தனது …

மேலும் படிக்க

எனக்கும் பெண் ஜர்னலிஸ்ட் அம்ரிதாவுக்கும் உள்ள தொடர்பு உண்மையே: காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் ஒப்புதல்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் பொதுச்செயலருமான 67 வயது திக்விஜய்சிங் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதா ராய்க்கும் தமக்கும் பழக்கமிருக்கிறது.அவரை திருமணம் செய்ய இருக்கிறேன் என்று அறிவித்துள்ளார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்ரிதாவுக்கும் திக்விஜய்சிங்குக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாகவும் இது தொடர்பான சில புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக இணையதளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதனால் …

மேலும் படிக்க

“அக்னி நட்சத்திரம்” கத்திரி வெயில் 113 டிகிரியை தாண்டும் – வானிலை மையம் அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டு கோடை வெயில் 113 டிகிரி வரை எட்டக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “அக்கினி நட்சத்திரம் அல்லது “கத்தரி வெய்யில் என்று சுட்டெரிக்கும் காலம். சித்திரை மாதத்தின் கடைசி பின் பத்து நாட்களிலும், வைகாசிமுதல் பதினைந்து நாட்களிலும் அதிகமாக இருக்கும் மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்குகிறது. இது மே 28 ம் தேதி வரை நீடிக்கும். அதற்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை எட்டிவிட்டது. …

மேலும் படிக்க

சென்னையில் மே 1 முதல் 2 மணி நேரம் மின்தடை – உங்கள் ஏரியாவில் எப்போது மின் தடை அறிந்து கொள்ளுங்கள்

மே 1ம் தேதி முதல் சென்னையில் 2 மணி நேர மின் தடை அமலுக்கு வருகிறது. மின்சார வாரியம் அறிவித்துள்ள, சுழற்சி முறையில் மின் தடை அமலாகும் பகுதிகளின் விவரம் : காலை 8 மணி முதல் 10 மணி வரை புரசைவாக்கம் (ஒரு பகுதி), டவுட்டன், தேனாம்பேட்டை (ஒரு பகுதி), அண்ணா சாலை (ஒரு பகுதி), கதீட்ரல் சாலை (ஒரு பகுதி), தியாகராய நகர், பாண்டி பஜார், தெற்கு …

மேலும் படிக்க