செய்திகள்

தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் மே1 முதல் உயர்கிறது

[pullquote] சாய்வு வசதி உடைய சொகுசு ஏர் பஸ்சுக்கு ரூ. 20, வோல்வோ பஸ்சுக்கு ரூ. 30, படுக்கை வசதியுடன் கூடிய ஏ.சி. பஸ்சுக்கு ரூ. 50 உயர்த்தப்பட உள்ளது.[/pullquote] சென்னை: தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்களின் கட்டணம் மே 1ம்தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. தற்போது விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ் கட்டணத்தை உயர்த்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் …

மேலும் படிக்க

ராகுல் காந்தி, தலித் பற்றி கருத்து: பாபா ராம் தேவ் மீது வழக்கு

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தலித் மக்களைத் தொடர்புப்படுத்தி பேசிய பேச்சுக்காக, யோகா குரு பாபா ராம் தேவ் மீது பீகார் மாநில நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் மாநில உணவு அமைச்சருமான ஷ்யாம் ரஜக் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்காக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354-ன் கீழ் நடவடிக்கை …

மேலும் படிக்க

தமிழ் திரைத்துறையைக் காப்பாற்ற ஒரே தீர்வு தமிழ் திரைப்பட வர்த்தக சபை – டி.எஸ்.ஆர். சுபாஷ்

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் மற்றும் சினிமா எடிட்டர், டி.எஸ்.ஆர் சுபாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: [pullquote]உலகின் முதல் கலைஞனே கடவுளாகத்தான் இருக்க முடியும். இல்லையென்றால் இப்படிப்பட்ட வியக்கத்தக்க, ரசிக்கத்தக்க, வலிமைமிக்க, பல தரப்பட்ட  காட்சிகளுடன் பல விதமான சத்தங்களைக் கொண்ட பிரம்மாண்டமான உலகை படைத்திருக்க முடியுமா? [/pullquote] மனித குல கண்டுப்பிடிப்புகளில் மிகவும் அதிசயத்தக்க ஒன்று சினிமா. ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆளுமை கொண்டது சினிமா. அது …

மேலும் படிக்க

காவல் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம், மிரட்டல் கடிதம்: போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி

[pullquote]பாஜக ஆட்சிக்கு   வந்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்.[/pullquote] கடந்த சில தினங்களுக்கு முன்னர்,   காவல் நிலையங்களுக்கு வந்திருந்த மிரட்டல் கடிதத்தால்   சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார்   நிலையில் உள்ளன. இதில் சென்னையில் உள்ள காவல்   நிலையங்களில் உச்சகட்ட உஷார் நடவடிக்கையாக, புகார்   கொடுக்க வருபவர்களை பற்றி தீவிர விசாரணையும் நடத்தப்படுகிறது.   புகார் கொடுக்க வந்தவர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை   வரவேற்பு அறையிலேயே விரிவாக எழுதி வாங்கினர். …

மேலும் படிக்க

ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு மே 19ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா மீதான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. [pullquote]இவர்கள் இருவரும் எப்போது நேரில் ஆஜராக வேண்டும் என்பது அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.[/pullquote] தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான …

மேலும் படிக்க

மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஜெ.ஜெயலலிதா

இது தொடர்பாக தமிழக  முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.4.2014 அன்று  தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள்  படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியை  அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்,  தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் …

மேலும் படிக்க

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கு தனிப் பிரிவு: துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன்

[pullquote]வரும் கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்புக்கென தனிப் பிரிவு தொடங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன்.[/pullquote] சென்னை பல்கலைக்கழகத் தில் எம்பிஏ படித்த மாணவர் களுக்கு டி.சி.எஸ்., ஹெச்.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் 60 மாணவர்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்துள்ளன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக சேப்பாக்கம் …

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பதற்கான விண்ணப்பங்கள் மே 14-ம்தேதி முதல் விநியோகம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான விண்ணப்பங்களை மே 14-ம் தேதி முதல் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு, மே 9-ம் தேதி வெளியாகிறது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் …

மேலும் படிக்க

மேஜர் முகுந்த் உடலை எடுத்து வந்த ராணுவ பைலட் எழுதிய உருக்கமான கடிதம்

கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவரான மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை விமானத்தில் கொண்டு வந்த விமானி முகுந்தின் தாய்-தந்தையருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏர்-இந்தியா விமானத்தை ஓட்டி வந்த கேப்டன் எஸ். சீனிவாசன் என்ற அந்த விமானி எழுதிய கடிதத்தில், பாசத்திற்குரிய தந்தை மற்றும் தாய் அவர்களுக்கு என்று தொடங்கும் அக்கடிதத்தில், …

மேலும் படிக்க

மேஜர் முகுந்த் உடல் சென்னையில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜன் உடல், சென்னை, பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் 42 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இரு ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்களும் 3 தீவிரவாதிகளும் இறந்தனர். இதில், …

மேலும் படிக்க