செய்திகள்

இன்ஜினியரிங் விண்ணப்பம் மே 3ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் – அண்ணா யுனிவர்சிட்டி

2014 ம் ஆண்டிற்கான பி.ஈ/பிடெக் படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 3 ம் தேதி முதல் விநியோகிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு http://online.annauniv.edu/tnea/dates.php என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். S.No Events Dates 1. Issue of notification inviting application for Admission to B.E./B.Tech. 02.05.2014 2. Issue of application forms 03.05.2014 3. Last date for issue of application form 20.05.2014 4. Last date for …

மேலும் படிக்க

தமிழகத்தில் வாக்குப்பதிவு 70% – பிற்பகல் 5 மணி நிலவரம்

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி, தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 79.32% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 56.84% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆலந்தூர் இடைத் தேர்தல் 62% வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு: தொகுதி காலை 9 மணி காலை 11 மணி மதியம் 1 …

மேலும் படிக்க

சென்னையில் தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத ஐ.டி நிறுவனங்களுக்கு சீல்:

சென்னை சோழிங்கநல்லூரில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி இன்று விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட ஐ.டி.நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஐ.டி.நிறுவனங்களில் இன்று பணிபுரிந்து கொண்டிருந்த 3500க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்றி தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நாளான இன்று அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறிய ஐ.டி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சில ஐ.டி நிறுவன …

மேலும் படிக்க

நெல்லையில் சென்னை சில்க்ஸ் கடைக்கு சீல்

தேர்தலையொட்டி நெல்லையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக் கடையை இன்று மூடவில்லை. விடுமுறை விடப்படவில்லை. மேலும ஊழியர்களையும் வாக்களிக்கப் போகக் கூடாது என்று கூறியதாக தெரிகிறது இதையடுத்து ஊழியர்களில் சிலர் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பினர். இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் துணிக்கடையை மூடி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் படிக்க

இந்தியாவில் உயிர்களைக் காப்பாற்ற பயன்படும் வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில்: “உங்கள் அனைவருக்கு நன்றி. உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயனர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ரஷியா ஆகிய நாடுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒரு நாளில் 70 கோடி புகைப்படங்களும் 10 கோடி வீடியோக்களும் பகிரப்படுகின்றன. மார்ச் மாதம் வரை வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடியாக …

மேலும் படிக்க

நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு 24.04.2014 அன்று கட்டாயமாக விடுமுறை தரவேண்டும் – தொழிலாளர் நல ஆணையம்

நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுடைய தொழிலாளர்களுக்கு 24.04.2014 அன்று கட்டாயமாக ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பற்றி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் 24.04.2014 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1951ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135B ன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி …

மேலும் படிக்க

அங்கீகாரமில்லாத 723 பள்ளிகளின் அட்மிஷன் ரத்து, மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை

அரசு அங்கீகாரம் பெறாத 723 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 5,071 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட 34,871 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. தனியார் தொடக்கப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மட்டும் 6,278 பள்ளிகள் …

மேலும் படிக்க

ஐபிஎல் ஊழல்: நீதிபதி முட்கல் கமிட்டி விசாரணைகளை தொடரும்

இந்தியப் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்த நீதிபதி முட்கல் தலைமையிலான குழு தொடர்ந்து விசாரணைகளை நடத்த முடிவெடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று இதற்கு தாங்கள் உடன்பட்டுள்ளதாக நீதிபதி முட்கல் தெரிவித்துள்ளார். முட்கல் குழுவின் விசாரணை அறிக்கையில் சில பரிந்துரைகளும் செய்யப்பட்டிருந்தன. ஐபிஎல் போட்டிகள் தொடர்பில் மேலும் விசாரணைகள் தேவை என்றும் அதிலும் குறிப்பாக 13 பேர்களின் நடத்தை தொடர்பாக கூடுதலாக ஆராயப்பட வேண்டும் …

மேலும் படிக்க

சென்னையில் நாளை கோயம்பேடு மார்க்கெட், திரையரங்குகள் மூடப்படும்.

கோயம்பேடு மார்க்கெட் கோயம்பேடு மார்க்கெட், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அனைத்து வியாபாரிகளும் வாக்களிக்க ஏதுவாக, நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி ஓட்டு போட வசதியாக நாளை மார்க்கெட் மூடப்படுகிறது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்படும் திரையரங்கு உரிமையாளர் …

மேலும் படிக்க

வாக்களிப்பதற்கு வசதியாக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வாக்களிப்பதற்காக வெளியூர்களுக்கு செல்ல விரும்புவோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வெளியூரில் இருந்து அலுவல் நிமித்தமாக சென்னையில் தங்கியிருக்கும் நபர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்கள் இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளன. …

மேலும் படிக்க