செய்திகள்

கத்தி – தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் அல்லி ராஜா உடன் ஜெயசூர்யா

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர், இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதற்கான ஆதாரம் என்று இணையத்தில் உலவி வரும் ஃபோட்டோக்கள். ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலாபலன்களைப் பெற்றுவருவதாகவும், லைக்கா நிறுவனத்தின் செயல் …

மேலும் படிக்க

சென்னை பல்கலைகழகத்தின் இலவச கல்வி திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக ஏழை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2014-2015 ம் கல்வி ஆண்டிற்கான இலவச கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள்) மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த 3 மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், …

மேலும் படிக்க

நரேந்திர மோடிக்கு கல்யாணம் ஆயிடுச்சாம்! திருமணமானவர் என வேட்பு மனுவில் தகவல்

பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி மக்களவை தேர்தலில் போட்டியிட வதோதராவில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தான் திருமணமானவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவியின் பெயர் ஜசோடா பென் எனவும் குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மனைவியின் பெயர் ஜசோடா பென் என்றும், அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் …

மேலும் படிக்க

நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி மனு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி

நீலகிரி தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக குருமூர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பும னுவை தாக்கல் செய்த போது கட்சியின் கடிதத்தை இணைக்கவில்லை. அதேபோல் பாஜகவின் மாற்று வேட்பாளரும் தமது மனுவில் இணைக்கவில்லை. இதனால் குருமூர்த்தி மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் …

மேலும் படிக்க

தாக்கியவரை நேரில் சந்தித்த கெஜ்ரிவால்.. மன்னிப்பு கேட்டார் அடித்த ஆட்டோ டிரைவர்

டெல்லி சுல்தாபுரில் பிரசாரம் செய்த போது லாலி என்ற ஆட்டோ டிரைவர் திடீரென கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்து விட்டார். லாலியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று லாலி வீட்டுக்குப் சென்ன்றார். பின்னர் லாலிக்கு அவர் மாலை அணிவித்து, அவரிடம் பேசினார். கன்னம் வீங்கிய நிலையில் காணப்பட்ட கெஜ்ரிவாலிடம் லாலி மிகவும் உருக்கமாகப் பேசி மன்னிப்பு கோரினார். லாலி கெஜ்ரிவாலை அடித்ததுமே அவரை ஆம் ஆத்மி கட்சியினர் …

மேலும் படிக்க

மு.க. ஸ்டாலின் அவர்கள் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு இரா. கிரிராஜன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி ஓட்டேரி பாலம் சந்திப்பு, திரு.வி.க.நகர் பகுதியில் கழகத்தின் தலைவர் கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட கழக வெற்றி வேட்பாளர் திரு இரா. கிரிராஜன் அவர்களை ஆதரித்து பேசியபோது, வரவிருக்கும் 24ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தல், மத்தியில் மதசார்பற்ற ஒரு ஆட்சியை உருவாக்க நடக்க விருக்கும் தேர்தல். அந்த தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் கைகாட்டிய வேட்பாளரான கிரி ராஜன் அவர்களை ஆதரிக்க உங்களிடம் ஓட்டு கேட்க …

மேலும் படிக்க

அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் தாக்கப்பட்டார் – அரசியலில் நல்லவர்கள் அடிமேல் அடி வாங்குவார்களோ?

டெல்லி சுல்தான்புரியில் கேஜ்ரிவால் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த அவரது கன்னத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அறைந்தார். அவரும் ஆம் ஆத்மி தொப்பி அணிந்திருந்தார் உடனடியாக அந்த நபரை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். பின்பு அந்த நபர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சம்பவத்திற்குப் பின்னர் பாஜகவை கடுமையாக விமர்சித்த கேஜ்ரிவால், பிரதமர் பதவியை அடைய ஏன் சிலர் வன்முறையை கடைபிடிக்கிறார்கள் என தெரியவில்லை. …

மேலும் படிக்க

நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி வழக்கு, அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீலகிரி தொகுதியில் குருமூர்த்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய வேட்பும னுவும் மாற்று வேட்பாளர் மனுவும் நேற்று அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டன. இவர்கள் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான கடிதத்தைக் கொடுக்கவில்லை என்பதால் வேட்புமனுக்கள் தள்ளுபடியானதாக கூறப்பட்டது. …

மேலும் படிக்க

காவல் துறை அதிகாரிகள் இடம் மாற்றத்தை ஏற்க மறுக்கும் மம்தா? தேர்தல் ரத்தாக வாய்ப்பு?

மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் 5 காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணயம் இட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தேர்தல் ஆணையம் எப்படி காவல் துறை அதிகாரிகளை மாற்ற முடியும்  என்று கேள்வி எழுப்பியுள்ளார். நான் யாரையும் இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது, இதனால் சட்டம் ஒழுங்கு கெட வாய்ப்புண்டு என்று …

மேலும் படிக்க

ஆ.ராசா தொகுதியில்(நீலகிரி) பிஜேபி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்புமனு இன்று நிராகரிக்கப்பட்டது. கட்சியின் அங்கீகார கடிதத்தை கொடுக்க தவறியதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வேட்பாளர் தரப்பில் கட்சியின் அங்கிகார கடிதத்தை சற்று தாமதமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் கடிதம் இதுவரை மாவட்ட ஆட்சியர்க்கு கிடைக்கவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளதாம். இதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிரத்தினம் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள் …

மேலும் படிக்க