மாநகர செய்திகள்

வள்ளலாரை பின்பற்றும் அடியார்களின் உண்ணாவிரதம்

வள்ளலாரை பின்பற்றும் அவரின் அடியார்கள், வள்ளாலார் வாழ்ந்த சென்னை இல்லத்தை நினைவிடமாக அமைக்க வேண்டியும் மேலும்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க

பள்ளி ஆண்டு விழா! விளையாட்டு உற்சாகம் இங்கே…

இன்று தனியார் பள்ளிகள் கல்வியை மட்டுமே சிறந்த முறையில் தருவது மட்டுமல்லாது, தங்களது பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வன்ணம் பள்ளி ஆண்டு விழாவினை நடத்தி அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் திருவொற்றியூரில் உள்ள செயிண்ட் அந்தோணி மேல்நிலைப் பள்ளி நடத்திய ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் ஆர். பிச்சை, மாண்புமிகு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்டின் …

மேலும் படிக்க

சென்னையில் (மெட்ராஸ் ஐ) கண் நோய் பரவுகிறது

வைரஸ் மூலம் கண் நோய் ஏற்படுகிறது. தட்ப வெட்ப கால சூழ்நிலைக்கேற்ப இந்நோய் உண்டாகிறது.  இப்போது கண் நோய் சென்னையில் பரவி வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கண் நோய் அதிகளவு பாதித்து வருகிறது. கண் நோய் காற்று மூலமாகவும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களிலும் வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. …

மேலும் படிக்க

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் அதிரடி

லுங்கிப் பிரவேசம்! சென்னையில் ஆளூர் நவாஷ் அவர்களின் அதிரடி சென்னை ஏரிகள் நிறைந்த ஒரு பெருநகரம். ஆனால், இன்று ஏரிகள் முழுவதும் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக உருமாற்றப் பட்டுவிட்டது. ஏரிகளைப் போலவே சென்னையில் சேரிகளும் அதிகம். சென்னையின் உருவாக்கத்தில் சேரிமக்களின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால், இன்றைய சென்னையில் சேரிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை என்றெல்லாம் போற்றப்படும் இன்றைய நவீன சென்னையின் அடையாளங்கள் முற்றிலும் மாறிவிட்டன. மல்டிபிளக்ஸ் …

மேலும் படிக்க

நண்பர்கள் நகர நல அமைப்பின் சேவைகளின் ஒரு துளி

சிறையில் வாடும் சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்காக திருவள்ளுர் மாவட்டம், உட்கோட்டை கிராமத்தில் நடத்தப்படும் மகாத்மா காந்தி உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாள் விழா, சென்னை, பழைய வண்ணாரப் பேட்டையிலுள்ள நண்பர்கள் நகர நல அமைப்பின் சார்பாக 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை காலை 9.30 மணியளவில் அமைப்பின் பொருளாளர்       பி. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து …

மேலும் படிக்க

சென்னை பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசு

சென்னையை அடுத்த சிறுசேரியில் மென்பொருள் பொறியாளர் உமா மகேஷ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி எஸ்.பி. அன்பு தலைமையிலான போலீசார் மகேஷ்வரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகளான உமா மகேஸ்வரி, மேடவாக்கத்தில் தங்கியிருந்து, சிறுசேரி தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி பணிக்குச் சென்ற உமா மகேஸ்வரி, அறைக்குத் …

மேலும் படிக்க

சென்னை மாநகராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை வணிக வளாக வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கு சென்னை மாநகராட்சி, மின்சாரம் வழங்ககோரியும், மேற்கூரை அமைத்து தர வேண்டியும், M.G ரோடு மற்றும் G.A ரோட்டில் உள்ள நடை பாதை கடைகளை அப்புறப்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க

“அம்மா தியேட்டர்ஸ்”, “அம்மா வார சந்தை” – அம்மா உணவகத்தை அடுத்து வருகிறது,

சென்னை: அம்மா உணவகம், அம்மா குடிநீரை அடுத்து ஏழை மக்கள் குறைந்த விலையில் படம் பார்க்க அம்மா திரையரங்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மேயர் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அம்மா தியேட்டர்ஸ் அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா தங்கும் விடுதி, அம்மா உண்டு, …

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரெயில் 40 கி.மீ. தூரத்துக்கு சோதனை ஓட்டம்

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் சுமார் ரூ.14,500 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோயம்பேடு பணிமனையில் இருந்து கோயம்பேடு ரெயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதையடுத்து கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு …

மேலும் படிக்க