தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் – ன் 14 வது மாநில மாநாடு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ( 08-11-2014) அன்று நடைபெறுகிறது. இந்த மாநாடு மகத்தான வெற்றி பெற ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக வாழ்த்துகிறோம்
மேலும் படிக்ககாய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
காய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம், மருத்துவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு என்று பொதுமக்களுக்கு தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி மருத்துவர்களும் ஸ்டெராய்டு, டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது. ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர …
மேலும் படிக்கரஜினி அரசியலுக்கு வரக் கூடாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என்பதே எனது கருத்து என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். பாஜகவினரும், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் வெளியேறிய ஜி.கே. வாசனும் ரஜினிகாந்தின் ஆதரவை எதிர்பார்த்து அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இந்த கருத்தை இளங்கோவன் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வரக் கூடாது. …
மேலும் படிக்கமத்திய அமைச்சரவை விரிவாக்கம்?
இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான ஆட்சியமைந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை இந்த வார இறுதியில் மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த மே மாதம், 7 பெண்கள் அடங்கலாக 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஆறுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்றனர். குறிப்பாக, அமைச்சர் அருண் ஜெட்லி முக்கிய இரண்டு பொறுப்புக்களான …
மேலும் படிக்ககனிமவள முறைகேடுகளில் தமிழக அரசு சிலரை காப்பாற்ற முயல்கிறதா?
தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்திருப்பதன் மூலம் நீதிமன்ற உத்தரவை அவமதித்திருப்பதாக சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. …
மேலும் படிக்கநாடாளும் மக்கள் கட்சி கலைப்பு: காங்கிரஸில் இணைந்தார் நடிகர் கார்த்திக்
நாடாளும் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அதன் தலைவர் நடிகர் கார்த்திக் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்த்திக், “நான் காங்கிரஸுக்கு புதியவன் அல்ல. மக்களவை தேர்தலிலும் எனது ஆதரவை அளித்தேன். இப்போது என் வீட்டுக்கு நான் திரும்பி வந்துள்ளேன். வீட்டில் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது. பிரச்சினை …
மேலும் படிக்கவாக்காளர் பட்டியலில் குளறுபடி: தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. அந்த புகார் மனுவில், வரைவு வாக்காளர் பட்டியலில் ஒருவரின் புகைப்படம் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டால் அவர்கள் மூலம் கள்ள ஓட்டுகள் பதிவாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இது குறித்து திமுக சார்பில் …
மேலும் படிக்கடில்லி சட்டசபை கலைப்பு : குடியரசுத் தலைவர் உத்தரவு
டில்லி சட்டசபையை கலைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும்பான்மை பெறாத காரணத்தால் எந்த கட்சியும் டில்லியில் ஆட்சி அமைக்க முன் வராததால், டில்லி சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரை செய்திருந்தார். இதனை அடுத்து குடியரசுத் தலைவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவைக் கலைக்கப்பட்டதால், டில்லி சட்டப்பேரவையின் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கை ரத்து …
மேலும் படிக்கசென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு தேவை : நிதின் கட்கரி வேண்டுகொள்
சென்னைத் துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை திட்டப் பணிகள் தொடர்பான பிரச்சினையை உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும், இப்பணியை முடிக்க தமிழக முதல்வர் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக சென்னைத் துறைமுகத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:- சென்னைத் …
மேலும் படிக்கஆன்லைனில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்: உச்சநீதிமன்றம் கெடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மின்னணு தொழில் நுட்பத்தின் மூலம் கோரிக்கைகளைப் பெற்று, தகவல்களை அளிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து 3 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பொதுமக்கள் எழுத்துபூர்வ மாகவும், மின்னணு தொழில் நுட்பங்கள் மூலமாகவும் தகவல் …
மேலும் படிக்க