முக்கியசெய்திகள்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலியாக இருந்த 530 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த  18-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 1,486 பேர் போட்டியிட்டனர். உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தங்கம், வெண்கலம் வென்றது

தென்கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக்கிழமை துவங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சூடுதல் ஆடவர் 50 மீட்டர் போட்டியில் இந்தியாவின் ஜீது ராய் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை சுவேதா சௌத்ரி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தென் கொரியாவின் அதிபர் பார்க் ஜூன் ஹீ முறைப்படி, ஆசியப் போட்டியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரபல நடிகை லீ யங், ஆசியப் …

மேலும் படிக்க

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி அமெரிக்கர்?

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்மொழிந்துள்ளார். அவரது நியமனம் உறுதியாகும் என்றால், இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கராக வர்மா ஆவார். வழக்கறிஞரான வர்மா அமெரிக்க ராஜாங்க அமைச்சில் பணியாற்றியுள்ளார். இந்திய ராஜீய அதிகாரி ஒருவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணின் தொடர்பில் விசா மோசடி செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு சென்ற ஆண்டு நியூயார்க்கில் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இந்தியா அமெரிக்கா இடையிலான …

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்தித்தார் பில்கேட்ஸ்

இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில்கேட்ஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். தனது மனைவி மெலிண்டா கேட்சுடன் இந்தியா வந்த பில் கேட்ஸ், பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பில் கேட்ஸ், பிரதமர் மோடி அறிவித்துள்ள கிளீன் இந்தியா திட்டத்தை தான் பாராட்டுவதாகவும், மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கான ஒரு முதல் முயற்சியே …

மேலும் படிக்க

இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் காலமானார் – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் ஸ்ரீநிவாசன். இவரது தந்தை சத்யநாராயணன் மாண்டலின் இசைக் கலைஞராவார். அவரிடம் இசைக் கருவியை …

மேலும் படிக்க

வருமான வரி வழக்கு: அக். 1ல் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்:எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 -ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா, மற்றும் சசிகலா மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பல ஆண்டுகளாக நடைபெறும் இவ்வழக்கில் …

மேலும் படிக்க

சகாயம் தலைமையிலான குழுவிற்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

கிரானைட், மணல் குவாரி முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் தமைமையிலான குழுவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சகாயம் குழுவினரின் விசாரணைக்கு தமிழக அரசு உதவி செய்யும் என  உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக …

மேலும் படிக்க

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்ககூடாது: முதல் அமைச்சர் ஜெயலலிதா

ஆங்கிலத்தைப் போல் இந்தியையும் முதன்மைப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு, தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்று தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை …

மேலும் படிக்க

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 300-க்கும் அதிகமான பகுதிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவை வீடியோ மூலம் பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.   வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் …

மேலும் படிக்க

மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன்!

அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன். விழாவில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், தாயார் கீதா வரதராஜன், மனைவி இந்து முகுந்த், …

மேலும் படிக்க