முக்கியசெய்திகள்

உலக ரத்ததான தினம்: இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்

உலக ரத்ததான தினம் உலக ரத்ததான தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “உலக ரத்ததான தினமான இன்று ரத்ததானம் செய்யும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ரத்ததானம் செய்வது சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவை. ரத்ததானத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று நாம் மீண்டும் உறுதிமொழி ஏற்போம். எனது …

மேலும் படிக்க

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு 27907 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். முதலிடம் சுந்தரமகேஷ் தரவரிசைப் பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த 132 பேரில், மாணவர் சுந்தரமகேஷ் முதலிடம் …

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு இல்லை – மத்திய அமைச்சர்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை தெரிவித்தார். தற்போதைய விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று கூறியுள்ள அவர், மக்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய சிலிண்டர்களின் எண்ணிக்கையும் 12-ஆக அதே நிலையில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல்விலை குறித்து மத்திய அரசு தான் …

மேலும் படிக்க

பார்வையற்ற தமிழக மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை

சென்னை ஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் தேசிய அளவில் சாதனை படைத்தார். மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (யூபிஎஸ்சி) 2013-ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்காக தேர்வு எழுதியவர்களில் 1,122 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் தமிழக மாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த 109 பேரில், பினோ ஜெபின் என்ற பார்வையற்ற …

மேலும் படிக்க

நாளை டிஎன்பிஎஸ்சி விஏஓ தேர்வு – காலியாக உள்ள இடங்கள் 2,342

திருச்சி: தமிழகத்தில் காலியாக உள்ள 2,342 விஏஓ பணியிடங்களை நிரப்ப நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நாளை தேர்வு நடத்துகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில்  வெளியிடப்பட்டது. தேர்வு எழுதுவோர் …

மேலும் படிக்க

குஜராத்திலும் விரைவில் மலிவு விலை உணவகங்கள்!

அம்மா உணவகங்கள் போல் குஜராத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஏழை எளியோர்கள் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வெளியூர்களில் இருந்து வந்து செல்வோர் குறைந்த செலவில் உணவருந்தி செல்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை தொடங்கினார். இங்கு மலிவு விலையில் காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் உணவு கிடைக்கிறது. அம்மா உணவகங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், உணவுகள் தரமான முறையில் …

மேலும் படிக்க

உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கோலாகலமாக இன்று ஆரம்பம்!

உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா இன்று பிரேசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு ரூ.84,000 கோடி செலவழித்துள்ளது. இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த …

மேலும் படிக்க

இமாச்சல பிரதேசத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் காட்சி

இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற …

மேலும் படிக்க

ஊன்றுகோல் தரும் கல்வி நிறுவனம் – வடசென்னை, செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர்கள் நல்லவர்களாக வளர்வதற்கு உறுதுணை புரிவது பெற்றோர்களும், ஆசிரியர்களுமே! அவ்வகையில் கல்வியில் சிறந்த ஒழுக்கமுள்ள மாணவ/மாணவிகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதலிடம் பெறுகிறதெனில், அதனை திறம்பட நிர்வாகித்து தந்திடும் பள்ளியும் முதலிடம் பெறுவதும் அம்மாணவர்களின் வாழ்க்கை தரத்திற்கு உறுதுணை புரிகிறது என்று சொன்னால் அதுமிகையல்ல. அத்தகைய பெருமை தந்த பள்ளியாக வடசென்னை, செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி திகழ்கிறது என்பதை 2013 …

மேலும் படிக்க

மக்கள் விழிப்புணர்வு பெற உங்கள் உதவி தேவை – காவல்துறை உதவி ஆணையர் வேண்டுகொள்.

நாலு பேருக்கு நன்மை செஞ்சா நல்லவங்களை விடமாட்டாங்க…. என்ற பாடல் வரிகளை பொய்யாக்கி வருவதில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன் தங்கள் பணியில் அர்ப்பணம் செய்து வருகின்றனர் என்பதற்கு அடையாளம்தான் மணலி புது எம்ஜிஆர் நகரில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்கள். மணலி, மாதவரம் நகரியம் (PPFA) தலைவர் எஸ். மாபு பாஷா தலைமையில் மணலி நகரியம் (PPFA) …

மேலும் படிக்க