சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருப்பதா மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். நேற்றைய வானிலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் வேலூரில் 105 பாரன்ஹீட்டும், சேலத்தில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் 95 …
மேலும் படிக்கமாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானப் பயணிகளின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முடிவு?
மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மாயமான மலேசிய ஏர்லைன்ஸின் MH370 விமானத்தின் தேடுதல் சில வருடங்களாவது எடுக்கலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த விமானத்தின் காணாமற் போன பெரும்பான்மை சீனப் பயணிகளின் உறவினர்கள் இன்று வெள்ளிக்கிழமை தமக்கு உறுதியான பதில் தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர முடிவு எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சீனாவின் பீஜிங்கில் MH370 பயணித்த தமது குடும்பத்தினர் குறித்த தகவலுக்காக ஹோட்டலில் காத்திருந்த …
மேலும் படிக்கமே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
சென்னை, ஏப்ரல்:25: வரும் மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, பள்ளி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் 9ம் தேதி, காலை 10 மணி அளவில் பள்ளி தேர்வுகள் இயக்கக இணைய தளங்களில் முடிவுகளை பார்க்கலாம். இணைய தள முகவரிகள்: www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in
மேலும் படிக்கஆஸ்திரேலியா விமானத்தை கடத்த முயற்சியா?
ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவின் ஃபாலி தீவுக்கு வந்துகொண்டிருந்த விர்ஜின் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் பைலட் அறைக்குள் பயணி ஒருவர் நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபர் பைலட்டை தாக்கிவிட்டு விமானத்தை கடத்த முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது அறைக்குள் ஒருவர் நுழைய முயலுவதை பார்த்து பரபரப்படைந்த விமானத்தின் பைலட், விமானத்தை கடத்த முயற்சி நடப்பதாக ஃபாலி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக …
மேலும் படிக்கதமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன:வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
தமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967க்குப் பிறகு 46 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவாகும். 2009 தேர்தலில் 72.98 சதவீத வாக்குகள் பதிவாயின. அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. தற்போது 46 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. …
மேலும் படிக்கராஜீவ் காந்தி கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை மாநில அரசு விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்துள்ளது. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் ரஞ்சன் …
மேலும் படிக்கஇன்ஜினியரிங் விண்ணப்பம் மே 3ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் – அண்ணா யுனிவர்சிட்டி
2014 ம் ஆண்டிற்கான பி.ஈ/பிடெக் படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 3 ம் தேதி முதல் விநியோகிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு http://online.annauniv.edu/tnea/dates.php என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். S.No Events Dates 1. Issue of notification inviting application for Admission to B.E./B.Tech. 02.05.2014 2. Issue of application forms 03.05.2014 3. Last date for issue of application form 20.05.2014 4. Last date for …
மேலும் படிக்கதமிழகத்தில் வாக்குப்பதிவு 70% – பிற்பகல் 5 மணி நிலவரம்
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி, தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 79.32% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 56.84% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆலந்தூர் இடைத் தேர்தல் 62% வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு: தொகுதி காலை 9 மணி காலை 11 மணி மதியம் 1 …
மேலும் படிக்கசென்னையில் தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத ஐ.டி நிறுவனங்களுக்கு சீல்:
சென்னை சோழிங்கநல்லூரில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி இன்று விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட ஐ.டி.நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஐ.டி.நிறுவனங்களில் இன்று பணிபுரிந்து கொண்டிருந்த 3500க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்றி தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நாளான இன்று அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறிய ஐ.டி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சில ஐ.டி நிறுவன …
மேலும் படிக்கநெல்லையில் சென்னை சில்க்ஸ் கடைக்கு சீல்
தேர்தலையொட்டி நெல்லையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக் கடையை இன்று மூடவில்லை. விடுமுறை விடப்படவில்லை. மேலும ஊழியர்களையும் வாக்களிக்கப் போகக் கூடாது என்று கூறியதாக தெரிகிறது இதையடுத்து ஊழியர்களில் சிலர் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பினர். இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் துணிக்கடையை மூடி சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் படிக்க