முக்கியசெய்திகள்

டைட்டானிக் கடைசிக் கடிதம் ஏலத்துக்கு வருகிறது

டைட்டானிக் கப்பலில் இருந்து எழுதப்பட்டிருக்கக் கூடிய கடைசி கடிதம் பிரிட்டனில் ஏலத்திற்கு வருகிறது. ஏலத்தில் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் டாலர்களுக்கும் அதிகமாக விலைபோகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தக் கப்பல் நீரில் மூழ்குவதற்கு சில மணி நேரம் முன்னதாக இந்தக் கடிதத்தை, அதில் பயணித்த எஸ்தர் ஹார்ட் என்னும் பெண், லண்டனில் இருந்த தனது தாயாருக்கு எழுதியுள்ளார். அந்த விபத்தில் உயிரிழந்த எஸ்தரின் கணவரின் கோர்ட் பாக்கட்டில் அந்தக் கடிதம் கடைசியாக …

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் ஒருவர் 50 ஆண்டுகளில் முதல் தடவையாக மலேசியா பயணம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியா சென்றுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் பதவியிலுள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் மலேசியாவுக்கு சென்றுள்ளது இதுவே முதல் தடவை. பசிபிக் பிராந்திய வணிக ஒப்பந்தம் ஒன்றில் மலேசிய அரசாங்கத்தை கையொப்பம் இடுமாறு ஒபாமா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் எல்லாக் காலங்களிலும் நல்லவிதமாக இருந்ததில்லை. அமெரிக்க கொள்கைகளை மலேசியப் பிரதமர்கள் பெரும்பாலும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர்.

மேலும் படிக்க

சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது: பிரதமர் மன்மோகன்சிங்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் பாஜகவில் நேற்று வெள்ளிக்கிழமை இணைந்தார். அதற்காக பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங்கிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, ‘எனக்கு வருத்தமாக உள்ளது. எனினும் அவர்களை கட்டுப்படுத்த எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்கள்’ என்று அவர் பதிலளித்தார். மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, பாஜக தலைவர் நரேந்திர …

மேலும் படிக்க

செயலிழந்த தமிழக தேர்தல் ஆணைய வெப்சைட்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவியாக இருந்த தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளம் (http://elections.tn.gov.in/)நேற்று முதல்செயலிழந்தது. இதுபற்றி கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன் குமார், இது ஹார்ட்வேரில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறுதான். அந்த தளத்தில் இருந்த தகவல்களை வேறொரு தளத்தில் பாதுகாத்து வைத்துள்ளோம். இதனால், எவ்வித தகவல் இழப்பும் ஏற்படவில்லை என்று கூறினார். இன்று இணையதளம் …

மேலும் படிக்க

சினிமா நூற்றாண்டுவிழா மோசடி – கழுவி, கூட்டி, பெருக்க 75 இலட்சம் செலவு

சினிமா நூற்றாண்டுவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது அது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் நடந்த ஊழல்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலை முன்னிட்டு வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. தென்னிந்திய சினிமாக்கள் சென்னையை பயன்படுத்திய காலத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை என்று பொதுவான பெயரில் சங்கம் அமைத்தது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழி சினிமாவுக்கு தனித்தனி சங்கங்கள் உள்ளன. அந்த சங்கங்களை வேறு மாநில சங்கங்கள் கட்டுப்படுத்த முடியாது. எனவே தமிழ்நாடு …

மேலும் படிக்க

தமிழகத்தில் மக்களவைக்கு சரியாக 73.67%, ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% வாக்குப்பதிவு:தேர்தல் கமிஷன்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 73.67 சதவீதம் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% ஓட்டு பதிவாகி உள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களின் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தொகுதிவாரியாக பதிவான ஓட்டுக்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. எண் தொகுதியின் பெயர் வாக்குப்பதிவு % 1  திருவள்ளூர் (தனி) …

மேலும் படிக்க

பெங்களூர்-நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்(17235) இன்று ரத்து: நாகர்கோயில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ்(17236) நாளை ரத்து

பெங்களூர்:விஜயவாடா டிவிஷனில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பெங்களூர்-நாகர்கோயில் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தங்களது கட்டண பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு தினமும் மாலை 5 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 17235) இயக்கப்படுகிறது. ஒசூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக இந்த …

மேலும் படிக்க

மும்பையில் மட்டும் 15 லட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்

மும்பையில் மட்டும் 15 லட்சம் வாக்காளர்கள்  பட்டியலில்  இருந்து நீக்கப்பட்டு இருப்பதால் வாக்காளர்கள் மத்தியில் கடும்  கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாநிலம் முழுவதும் 60 லட்சம் பேரின்  பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் அதோடு அனைத்து தொகுதியிலும்  மறுதேர்தல் நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த  மக்களவை தேர்தலில் அதிகப்படியான வாக்காளர்களின் பெயர்கள்  விடுபட்டு போய் இருந்தது. அதாவது மும்பையில் உள்ள மொத்த  வாக்காளர்களில் 15 …

மேலும் படிக்க