ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்-2015 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்-2015 பதிப்பு
மேலும் படிக்க“விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் பெருமைமிகு விருதை வென்றுள்ளது. வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்று, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் திரைப்படங்கள் பல வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தப் படமும் விருது பெறவில்லை. தனுஷின் “வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் …
மேலும் படிக்கஅதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்க வேண்டும்:ஜெயலலிதா
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கு தமிழர்கள் தழைத்தோங்கி வாழ்ந்திடப் பிறந்த நம் அன்புக்குரிய பேரறிஞர் அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்த மடல் வழியாக, கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் இனத்தின் முன்னேற்றம் ஒன்றையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டு, பேரறிஞர் …
மேலும் படிக்கஇந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி
இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 என்ற இந்தி தொலைக்காட்சியில் நேற்றிரவு சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா குறித்து நேரலையாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற ஓம் ஜி என்ற சாமியார், மற்றொரு பங்கேற்பாளரான ஜோதிடர் ராக்கி பாய் என்ற பெண்ணிடம் கடுமையான வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ராதே மா குறித்து எவ்வாறு விமர்சிக்கலாம்; …
மேலும் படிக்ககிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன், சரத்குமாரின் மகள் ரேயான் திருமண நிச்சயதார்த்தம்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனுவிற்கும், சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளரான பெங்களூருவைச் சேர்ந்த அபிமன்யு மிதுன் ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயான் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் …
மேலும் படிக்கதமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு
வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு பருப்பு வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது இந்த மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு பருப்பு வரத்து குறைந்துள்ளது. இதனால், 135 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ துவரம் பருப்பு சில்லறை விலையில் தற்போது 150 …
மேலும் படிக்கஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச், 2-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஃபெடரரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். 2வது செட்டை ஃபெடரர், 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி …
மேலும் படிக்கஆஃப்கானிஸ்தானில் கைதிகளை விடுதலை செய்த தலிபான் தீவிரவாதிகள்
ஆஃப்கானிஸ்தானில் காஸ்னி சிறையில் காவலர்களைக் கொன்றுவிட்டு சிறையில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகளை ராணுவ உடையில் வந்த தலிபான் தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளனர். ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி மாகாணத்தின் முக்கியச் சிறைச்சாலையில் இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். சிறைக்காவலில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தீவிரவாதிகள், அங்கு அடைக்கப்பட்டிருந்த 352 கைதிகளை தப்பவைத்தனர். இந்த சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் …
மேலும் படிக்கஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்
உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். அப்போது அவர், தான் வேலை பார்த்த பேருந்தில் பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணம் பெற்றுக்கொண்டு, அதற்கான டிக்கெட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. திடீர் சோதனையின் போது சிக்கி கொண்ட அந்த நடத்துனர், உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சுக்லாவுக்கு குறைவான தண்டனை …
மேலும் படிக்கபீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு …
மேலும் படிக்க