பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 107-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மற்றும் சில முக்கியப் பிரமுகர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும் படிக்கமதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான்: கருணாநிதி
மதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியே, அதை நான் வரவேற்பேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று காலை, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர் :-தி.மு.கழகப் பொருளாளர் ஸ்டாலின் நேற்றைய தினம் டாக்டர் ராமதாஸ் இல்லத் திருமண வரவேற்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவைச் சந்தித்து பேசியிருக்கிறாரே; இந்தச் சந்திப்பு புதிய கூட்டணிக்கு தொடக்கமாக இருக்குமா? பதில் :- தொடக்கமாக இருந்தால் …
மேலும் படிக்கராமதாஸ் இல்லத் திருமண விழா : கருணாநிதி மணமக்களுக்கு வாழ்த்து
பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து உரை ஆற்றினார். முன்னாள் முதலமைச்சர்”என்று குறிப்பிட்டதற்குப் பதிலாக, என்னையும் டாக்டர் ராமதாஸ் அவர்களோடு சேர்ந்து உஙகளுடைய தாத்தா என்று அழைத்திருந்தால் நான் மிகுந்த பெருமை அடைந்திருப்பேன் வெள்ளம் போல் குழுமியிருக்கின்ற தமிழ்ப் பெருங்குடி மக்களே, அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்களே, உங்களுடைய இனிய முன்னிலையில் மிகுந்த மகிழ்ச்சியோடும் இரண்டறக் கலந்த அன்புப் பெருக்கோடும் …
மேலும் படிக்கநெட் தேர்வு: டிசம்பர், 28ம் தேதி நடைபெறும்: CBSE
‘நெட்’ (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் CBSE (சிபிஎஸ்இ) டிசம்பர் 28ம் தேதி நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி …
மேலும் படிக்கஇலங்கை மண்சரிவு விபத்தை அரசு நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்
இலங்கையில் பதுளை மாவட்டத்தில் ஹல்து முல்லையில் மண்சரிவில் புதையுண்டுள்ள தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதி, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும், அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றத் தவறியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மலையகத் தோட்டங்களில் வீடமைப்புகளின் போது, பாதுகாப்பான இடங்கள் தேர்ந்தெடுக்கப்படாமையும் மண்சரிவு அபாயங்களில் உயிரிழப்புகள் ஏற்படக் காரணம் என்று இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் …
மேலும் படிக்கஐ.நா. பொருளாதார, சமூக அமைப்பில் இந்தியா மீண்டும் தேர்வு
ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுளளது. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் மறு தேர்வு பெற்ற ஒரு வாரத்துக்குள் இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி இதுவாகும். 193 நாடுகள் உள்ள ஐ.நா. சபையில் பொருளாதார, சமூக அமைப்புக்காக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 183 வாக்குகளை இந்தியா பெற்றது. இந்த அமைப்புக்கான தேர்தலில், ஆசிய-பசிபிக் நாடுகளில் இதுவரை அதிகளவு வாக்குகள் பெற்ற நாடுகளில் …
மேலும் படிக்கபோலி வாக்காளரை கண்டுபிடிக்க புதிய கணினி தொழில்நுட்பம்: தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியலை நூறு சதவீதம் பிழையின்றி தயாரிக்கவும், போலி வாக்காளர்களை கணினி தொழில்நுட்பத்தில் நீக்கவும் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம் நடந்து வருகிறது. இந்த திருத்தப் பணிகள் நவம்பர் 10-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், வாக்காளர் திருத்தப் பணிகளில் பல்வேறு பிழைகள் ஏற்படுகின்றன. பெயர், எழுத்து, முகவரி, புகைப்படம், வார்டு என பல வகைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. …
மேலும் படிக்கஅஜித் படத்தலைப்பு “என்னை அறிந்தால்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி கொண்டிருக்கும் பெயரிடப்படாத திரைப்படம் கிட்டதட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையிலும் படத்தின் தலைப்பு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு தலையைப் பிய்த்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் தான் படத்தின் தலைப்பு 30 அக்டோபர் அன்று வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. அதன்படி அஜித் படைத்தலைப்பு அதிகாரப்பூர்வமாக …
மேலும் படிக்கமோசமான சாலையால் அம்பத்தூர் மக்கள் அவதி
சென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூர் நகராட்சி இணைக்கப்பட்டு 3 ஆண்டாகிறது. 7வது மண்டலமான அம்பத்தூரில் 15 வார்டுகள் உள்ளன. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அம்பத்தூர், கொரட்டூர், மண்ணூர்பேட்டை, மங்கலபுரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான முக்கிய சாலைகள், குறுக்கு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பெய்து வரும் பருவ மழையால் சாலைகளும் சேறும் சகதியுமாக மாறி, மக்கள் நடமாட முடியாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். …
மேலும் படிக்கஉயிரணுக்களின் இயக்கத்தை படம் பிடிக்கும் புதிய நுண்ணோக்கி
இந்த வருடம் இரசாயனவியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்ட விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் எரிக் பெட்ஸிக் தலைமையிலான குழு ஒன்று அதிநவீன நுண்ணோக்கி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த நுண்ணோக்கியைப் பயன்படுத்தி உயிரணுக்களின் செயற்பாடுகளை வீடியோ போல படமெடுக்க முடியுமாம். வழக்கமான நுண்ணோக்கிகளைப் போல வெளிச்சத்தை மேலிருந்து பாய்ச்சாமல், பக்கவாட்டிலிருந்து மிக நுண்ணிய தட்டையாக பாய்ச்சி நுண்ணோக்கியால் பார்க்கும் தொழில்நுட்பமான சூப்பர் ரிசால்வ்ட் ஃப்ளூரசென்ஸ் மைக்ரோஸ்கோப்பி என்ற கண்டுபிடிப்புக்காக டாக்டர் எரிக்குக்கு நோபல் …
மேலும் படிக்க