அமுரா

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 200 பேர் காயம்

சவுதியின் கோபார் நகரில் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 219 பேர் காயமடைந்தனர். சவுதியின் கிழக்கு நகரான கோபாரில் உலகிலேயே மிகப் பெரிய ஆயில் நிறுவனமான சவுதி அராம்கோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். …

மேலும் படிக்க

அமிதாப் பச்சனின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டது

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. டிவிட்டர் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருபவர்களில் நடிகர் அமிதாப்பச்சனும் ஒருவர். இவரது டிவிட்டர் பக்கத்தினை சுமார் ஒன்றரை கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக மும்பை போலீசில் அமிதாப் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அமிதாப்பின் டிவிட்டர் பக்கம் சரி செய்யப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து …

மேலும் படிக்க

கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில்வளாகம் : முதல்வர் ஜெயலலிதா

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 1958-ஆம் ஆண்டில் கிண்டி தொழிற்பேட்டை முதன்முதலாக தமிழக அரசால் சென்னை நகரின் மையப் பகுதியில் உருவாக்கப்பட்டது. இத்தொழிற்பேட்டையில் கிடைமட்ட விரிவாக்கத்திற்கான நிலம் பற்றாக்குறையாக இருப்பதால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கும்; மேலும் கிண்டி தொழிற்பேட்டையில் ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விடுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்; அடுக்குமாடி தொழில் வளாகம் ஏற்படுத்திக் …

மேலும் படிக்க

இஞ்சி இடுப்பழகி டீஸர்!

இஞ்சி இடுப்பழகி படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் சைஸ் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் குண்டான தோற்றம் கொண்ட பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார். குண்டான ஒரு பெண்ணின் உடல் எடையைக் குறைக்க வைக்கும் கதையாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறையலாம்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் நாளை பெட்ரோல், டீசல் விலை மீண்டும் கணிசமான அளவுக்கு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. அதன்படி கடந்த 15ந் தேதி மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின்போது, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. அப்போது சர்வதேச சந்தையில் கச்சா …

மேலும் படிக்க

பிரபாகரன் தற்கொலை செய்துதான் இறந்தார்: கருணா பரபரப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சிக்கு பேட்டியளித்திருந்த கருணா, பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்; தான் பிரபாகரனுக்கு அடுத்ததாக ராணுவ தளபதியாக இருந்தேன்; எனக்கு கீழ்தான் பிற தளபதிகள் இருந்தனர் என்றெல்லாம் …

மேலும் படிக்க

சமத்துவ மக்கள் கட்சி – அதிமுக கூட்டணி தொடரும்: சரத்குமார்

வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அக் கட்சியின் தலைவர் சரத்குமார் கொடியேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சமத்துவ மக்கள் கட்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் …

மேலும் படிக்க

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர இடம் கிடைக்கும் வகையில் அந்த அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுசபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட்டிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட் தலைநகர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார். ஐநா பாதுகாப்பு சபையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்கிற …

மேலும் படிக்க

நில அவசரச் சட்டம்: தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியுள்ள நிலையில், அதனை ஆதரித்து வாக்களித்த தமிழக அரசு, விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்குமா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளின் நலனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்வாங்கி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிப்புக்கு …

மேலும் படிக்க

சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: ஈ.வி.கே.எஸ்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி 5வது நாளாக இன்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி …

மேலும் படிக்க