அமுரா

இலங்கையை துவம்சம் செய்த ரோஹித் சர்மாவுக்கு கருணாநிதி பாராட்டு

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 173 பந்துகளில் 9 சிக்ஸர், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இரண்டு இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனைகளைப் படைத்தார். ரோஹித் சர்மாவுக்கு திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி பாராட்டு …

மேலும் படிக்க

குயின்ஸ்லாந்து பல்கலையில் பிரதமர் நரேந்திர மோடி

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துச் சென்றார். பிரிஸ்பேன் விமான நிலையத்தை அடைந்த மோடி, ஒரு சில மணி நேரங்களில் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தில் அறிவியல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்த்தும், அவற்றின் பயன்பாடு குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார் மோடி. தேவையற்ற கழிவுகளை வேளாண்மைக்கு பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும், …

மேலும் படிக்க

உலக சாதனை: இமாலய சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 2-வது முறையாக இரட்டைச் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சேவாக் வசம் இருந்த உலக சாதனையையும் முறியடித்துள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய அவர், தனது …

மேலும் படிக்க

ஐந்து மீனவர்களின் விடுதலைக்கு, இந்தியப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு நன்றி: கருணாநிதி

ஐந்து மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்துசெய்யப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐந்து மீனவர்களின் விடுதலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த விடுதலைக்குப் பெரிதும் காரணமான இந்தியப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொள்ள …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து: இலங்கை

போதை பொருள் கடத்தியதாகக் கூறி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை எம்.பி. செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டதன் பேரில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஹெராயின் எனப்படும் போதைப் பொருளை இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடத்திச் சென்றதாக கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் …

மேலும் படிக்க

இராயபுரம், கல்மண்டபம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

பிரதி வருடம் ஐப்பசி மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் சிவாலயங்கள்தோறும் நடைபெறுகின்ற அன்னாபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின்னர் அன்னத்தால் (வெள்ளை சாதம், காய்கறிகள் இன்னும் பல அலங்காரம் செய்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு பிறகு சிவபெருமான் மீது அலங்கரித்த அன்னத்தை தரிசனம் செய்த பக்தர்களுக்கு வழங்குவர். இந்த தரிசனம் காண்போர்க்கு, அன்னத்தை உண்போர்க்கு அவர்களது வாழ்வில் அன்னம் குறைவின்றி கிடைக்குமென ஐதீகம். இராயபுரம், கல்மண்டபம் ஸ்ரீ அங்காள …

மேலும் படிக்க

மாபெரும் வெற்றி பெற்ற டியுஜே வின் 14 வது மாநில மாநாடு

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்டின் (டியுஜே) தலைவராக டி.எஸ்.ஆர் சுபாஷ் அவர்கள் பொறுப்பேற்றப் பிறகு நடைபெற்ற முதல் மற்றும் டியுஜே வின் 14 வது மாநில மாநாடு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சிறப்பாக நடைபெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பத்திரிகை தோழர்களே..! ஊடக நண்பர்களே..!! தோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிர்வாகிகளே…!!! ஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தை …

மேலும் படிக்க

‘நா காக்க!’ ‘நா காக்க!’ ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்

சட்டசபையை கூட்டுவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை குறித்து, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எனக்குக் கடுமையாகவும், தரம் தாழ்ந்தும் பதில் கூறி 10-11-2014 அன்று  ஓர் அறிக்கை விடுத்துள்ளார். கடந்த 7-11-2014 அன்று தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் என்ற முறையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுடன், நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில் தமிழகத்தில் அன்றாடம் அடுக்கடுக்கான …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் மரண தண்டனை விவகாரம்: ராஜபக்சேவுடன் பேசினாரா மோடி?

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள விவகாரம் தொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌சேவுடன் தொலைபேசியில் பேசியதாக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி தெரிவித்திருக்கும் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மாறாக இது குறித்து இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று அது சொல்லியிருக்கிறது. இலங்கைக்கு போதைப்பொருள் …

மேலும் படிக்க