சென்னை மாதவரம், குமரன் தெரு விரிவு, பகுதி 7, மண்டலம் 9 , கதவிலக்க எண் 96 எதிரில் அமைந்துள்ள குடிநீர் குழாய் கடந்த ஒருமாத காலமாக பழுதுபட்டு குடிநீர் முறையாக கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன் (PPFA) மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் கவனத்திற்கு கொண்டு வர, நாம் முறையாக சென்னை மாமன்ற 28 வது வார்டு உறுப்பினர் திரு E. சந்திரசேகர் …
மேலும் படிக்க10 இடங்களில் அம்மா மருந்தகங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
கூட்டுறவுத் துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் அம்மா மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். மேலும் கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 அம்மா மருந்தகங்களை திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: ‘நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத் துறையால் …
மேலும் படிக்கபொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்கவிருந்த பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இன்று தெரிவித்துள்ளார். புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான மனுக்கள் மீது முடிவெடுக்க அவகாசம் கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த …
மேலும் படிக்கரஜினி நடிக்க மறுப்பு: எந்திரன் 2ம் பாகத்தில் அஜீத்?
எந்திரன் 2–ம் பாகம் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததால் வேறு நடிகர் தேர்வு நடக்கிறது. அஜீத் பெயர் பலமாக அடிபடுகிறது என்கின்றனர். ரஜினி–ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி கரமாக ஓடிய படம் ‘எந்திரன்’ 2010–ல் இப்படம் ரிலீசானது வசூலிலும் சாதனை படைத்தது. இந்தி, தெலுங்கிலும் இது டப்பிங் செய்து வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை ‘எந்திரன்–2’ என்ற பெயரில் எடுக்க ஷங்கர் விருப்பமாக இருக்கிறார். இதன் …
மேலும் படிக்கபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7 ல் விசாரணை!
பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு வருகிற ஜூலை 7ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கை 5 பேர் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்த 7 பேருக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கநெட்டில் கசிந்த இது நம்ம ஆளு! டீசர் அதிர்ச்சியில் படக்குழு
நீண்ட இலைவெளி மற்றும் பல பிரச்சனைகளுக்கு அப்புறம் சிம்பு, நயந்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் இது நம்ம ஆளு ஆனால் தற்போது படக்குழுவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் படத்தின் சில காட்சிகள் நெட்டில் கசிந்துள்ளது, இதுவும் வியாபார யுத்தியோ? இப்ப டீசர் கூட திருட்டுதனமா வெளியிடுறாங்களோ?
மேலும் படிக்கரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் உத்தரவு
ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுடைய நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க …
மேலும் படிக்கமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி நியமனம் செல்லாது- உயர்நீதிமன்றம்
மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி நியமிக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளுக்கு மாறாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, சந்திரன்பாபு, இஸ்மாயில் ஆகிய இருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். கல்யாணி மதிவாணன், பேராசிரியராக பணியாற்றாமல் இணை பேராசிரியராக மட்டுமே பணிபுரிந்ததால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. நீதிபதிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் …
மேலும் படிக்க“லிங்கா” ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியீடு
கோச்சடையான் படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்க்ஷி சின்காவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர். ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் மைசூர் பகுதி உள்பட பல இடங்களில் நடந்தது. படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி காந்தின் பிறந்த நாளான டிசம்பர் மாதம் …
மேலும் படிக்கபி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்
பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை அண்ணா பல்கலைக்கழக www.annauniv.edu என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 23, 24 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்தப் பிரிவினருக்கு மொத்தமுள்ள 500 இடங்களுக்கு …
மேலும் படிக்க