செய்திகள்

இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 என்ற இந்தி தொலைக்காட்சியில் நேற்றிரவு சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா குறித்து நேரலையாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற ஓம் ஜி என்ற சாமியார், மற்றொரு பங்கேற்பாளரான ஜோதிடர் ராக்கி பாய் என்ற பெண்ணிடம் கடுமையான வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ராதே மா குறித்து எவ்வாறு விமர்சிக்கலாம்; …

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு

வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு பருப்பு வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது இந்த மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு பருப்பு வரத்து குறைந்துள்ளது. இதனால், 135 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ துவரம் பருப்பு சில்லறை விலையில் தற்போது 150 …

மேலும் படிக்க

ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். அப்போது அவர், தான் வேலை பார்த்த பேருந்தில் பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணம் பெற்றுக்கொண்டு, அதற்கான டிக்கெட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. திடீர் சோதனையின் போது சிக்கி கொண்ட அந்த நடத்துனர், உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சுக்லாவுக்கு குறைவான தண்டனை …

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 12-ந் தேதி முதல்  நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு …

மேலும் படிக்க

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு …

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் புதிய  கருவிகளான ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ்ஸை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் முறையே 4.7 மற்றும் 5.5 இன்ச் எல்ஈடி ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 6எஸ் 1334*750 ரெசல்யூஷனும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் 1920*1080 பிக்சல் ரெசல்யூஷனும் கொண்டிருப்பதோடு இரு கருவிகளும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கின்றது. புதிய ஐபோன்களில் 3டி ஃபோர்ஸ் டச் அம்சமும் ஏ9 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. புதிய …

மேலும் படிக்க

முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் கோடி முதலீடுகள் பெற இலக்காக கொண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ந்தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டனர். ஆனால், இலக்கை விட இரண்டு மடங்கு முதலீடு குவிந்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தனது நிறைவு உரையில் குறிப்பிட்டார். …

மேலும் படிக்க

தற்கொலைகள் இந்தியாவில்தான் அதிகம்

உலக அளவில் பார்க்கும் போது, இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களில் தான் அதிக அளவில் தற்கொலைகள் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்கொலைத் தலைநகராக சென்னை மாறி வருகிறது. இளம் வயதினரே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் லட்சுமி. …

மேலும் படிக்க

திருமுல்லைவாயல் காவல்துறைக்கு டியுஜே சார்பில் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம்

ஒரு கடத்தல் தொடர்பான திருமுல்லைவாயலில் காவல் நிலையத்திற்கு செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறை நண்பர்களே வணக்கம், நாங்கள் உங்களை போல் மக்கள் பணிகளை செய்து வருகிறோம். நாட்டில் நடக்கும் சம்பவங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பணியை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் நடந்து முடிந்த கடத்தல் …

மேலும் படிக்க

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு விவரங்கள்

தமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த விவரங்கள். கிண்டி கத்திப்பாராவில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் அமைந்துள்ள வர்த்தக மையத்தின் முதல் நுழைவாயிலில் இருந்து அங்குள்ள முதலாவது மற்றும் இரண்டாவது அறைக்கு செல்லலாம். அடுத்து அங்கிருந்து கூட்ட அரங்கிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அந்த மையத்தின் பின்பகுதியில், மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கான …

மேலும் படிக்க