செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலியாக இருந்த 530 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த  18-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 1,486 பேர் போட்டியிட்டனர். உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் …

மேலும் படிக்க

வருமான வரி வழக்கு: அக். 1ல் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்:எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 -ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று ஜெயலலிதா, மற்றும் சசிகலா மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பல ஆண்டுகளாக நடைபெறும் இவ்வழக்கில் …

மேலும் படிக்க

சகாயம் தலைமையிலான குழுவிற்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

கிரானைட், மணல் குவாரி முறைகேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் தமைமையிலான குழுவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சகாயம் குழுவினரின் விசாரணைக்கு தமிழக அரசு உதவி செய்யும் என  உச்ச நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சகாயம் குழுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக …

மேலும் படிக்க

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்ககூடாது: முதல் அமைச்சர் ஜெயலலிதா

ஆங்கிலத்தைப் போல் இந்தியையும் முதன்மைப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு, தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்று தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, இந்தி மொழியை …

மேலும் படிக்க

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 300-க்கும் அதிகமான பகுதிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவை வீடியோ மூலம் பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.   வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் …

மேலும் படிக்க

ஆபாசப் படம் பார்க்க வைத்ததாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் நித்யானந்தா

கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி நித்யானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கு நித்யானந்தா சரியாக‌ ஒத்துழைக்கவில்லை. ஆதலால் ஆண்மை பரிசோதனை முழுமையாக நடத்தவில்லை. நீதிமன்றத்தை …

மேலும் படிக்க

வாழ்த்துகிறோம் DSR சுபாஷ் அவர்களை… DSR சுபாஷ் தலைமையிலான TUJ விற்கே அங்கீகாரம்: IJU மாநாட்டில் அறிவிப்பு

  ஆந்திராவில்(திருப்பதி) நடந்த அகில இந்திய மாநாட்டில் (IJU), DSR வழி கண்ட DSR சுபாஷ் தலைமையிலான சங்கத்திற்கே அங்கீகாரம் என்ற அறிவிப்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்ற எங்களின் தலைவா DSR சுபாஷ் அவர்களே! நீங்கள் ஏழு மலைகளின் நகரில் வெற்றிக் கொடி நாட்டிய ஏகலைவன். தந்தையின் வழியில் நின்று எங்களை தலை நிமிரச் செய்தவரே! சங்கத்தை சிதைக்க நினைத்த புல்லுருக்களையும், வல்லுறுக்களையும் அற வழியில் சிதைத்து எங்களை …

மேலும் படிக்க

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சந்திப்பு

‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அர்னால்டுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர்.  சென்னை வந்திருக்கும் அர்னால்டு, ஏற்கனவே தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி பிற்பகல் 2.45 மணியளவில் …

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் பயணம்

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 4 நாள் சுற்றுப் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். இன்று அங்கு அவர் வியட்நாம் பிரதமர், துணைப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஆளும் கம்யூஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியோர்களை சந்திக்கிறார். எண்ணெய் துறையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. மேலும் அவர் அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட உள்ளார்.

மேலும் படிக்க

டோல் கேட் மோசடி சுங்க வரியா..? பகல் கொள்ளையா..? – திரு(த்)ந்துமா அரசு

டோல் கேட் மோசடி  சுங்க வரியா..?  பகல் கொள்ளையா..? – திரு(த்)ந்துமா அரசு அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!! 20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் …

மேலும் படிக்க