ஆசிய விளையாட்டு மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றார். 51 கிலோ எடைப்பிரிவில் மேரிகோம் தங்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேரி கோம் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 5 முறை உலக சாம்பியனான மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனை ஜாய்னா ஷெகெர்பெகோவா என்பவரை 2-0 என்று வெற்றி பெற்றார்.
மேலும் படிக்கஅமெரிக்க வெள்ளை மாளிகையில் மோடி எழுதிவைத்த வாழ்த்துக் குறிப்பு
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி எழுதி வைத்த வாழ்த்துக் குறிப்பு. இதில், வெள்ளை மாளிகையில் தாம் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களையும், இரு நாட்டு உறவுகளுக்கான கட்டாயத்தையும் குறிப்பிட்டும், மக்களை இணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி எழுதியுள்ளார்.
மேலும் படிக்கஜெயலலிதா மீதான தண்டனை ரத்து, ஜாமீன் வழக்கு விசாரணை அக்.7-க்கு ஒத்திவைப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம்
தண்டனை ரத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு அக்டோபர் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் புதிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா உடனடியாக ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை …
மேலும் படிக்கஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்: ஜாமீன் மனு மீது நாளை மீண்டும் விசாரணை
ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனு மீது நாளையே (புதன்கிழமை) விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றது. ஜாமீன் கோரியும், தண்டனை ரத்து கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்ட நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அவசர மனு ஒன்றை அளித்தனர். கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்கப்பட்ட அந்த …
மேலும் படிக்கவட சென்னையில் இரத்ததான முகாம்
நண்பர்கள் நகர நல அமைப்பு மற்றும் காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் 02-10-2014, வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, நெ2/2, நரசய்யர் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை – 600 021 என்ற முகவரியில் நடைபெறுகிறது. தொடர்புக்கு : 90257 33777, 93607 79797
மேலும் படிக்கஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6க்கு ஒத்திவைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 6ம் தேதி வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பெங்களுரு உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், இன்று இந்த மனு தொடர்பில் விடுமுறைக்கால சிறப்பு அமர்வின் நீதிபதி ரத்னகலா …
மேலும் படிக்ககுறுகியக் காலக் கடன்(ரெப்போ)க்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : RBI
ரிசர்வ் வங்கியால் பிற வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி(RBI) ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தில் மாற்றமில்லை என்றும், அது தற்போதிருக்கும் 8% ஆகவே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
மேலும் படிக்கதமிழக முதல்வராகப் பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம், திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அவர் ஏற்கெனவே வகித்த நிதி, பொதுப் பணித் துறைகளுடன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த துறைகளும் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற அமைச்சர்களுக்கு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அளிக்கப்பட்ட அதே பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், 30 அமைச்சர்களும் …
மேலும் படிக்கஆளுநர் ரோசையாவுடன் உள்துறைச் செயலாளர், டிஜிபி அவசர ஆலோசனை
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, உடனடியாக அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு வி்ட்டதால், தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகியோரை ஆளுநர் அவசரமாக அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஆளுநர் மாளிகைக்கு விரைந்து சென்று ஆளுநருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு குறித்தும், தமிழகத்தில் அதிமுகவினர் …
மேலும் படிக்க10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன்படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார். இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி