Tag Archives: மாநகர செய்திகள்

சினிமா பாணியில் திருடனை மடக்கிய போலீஸ்…

சென்னையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து பைக்கில் ஓட்டம் பிடித்த திருடனை, சினிமா பாணியில் தனது பைக்கில் விரைந்து சென்று மடக்கி பிடித்தார். மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) திரு. ஆன்டிலின் ரமேஷ் அவர்கள். காவலர் உங்கள் நண்பன் என்ற வரிகளுக்கு ஏற்ப தற்போது காவல் துறையினர் திறம்பட செயல்பட்டு வரு கின்றனர். பிடிப்பட்ட செல்போன் திருடன் மூலம் அவனது மூன்று கூட்டாளிகளையும் காவல் துறையினர் கைது …

மேலும் படிக்க

மோசமான சாலையால் அம்பத்தூர் மக்கள் அவதி

சென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூர் நகராட்சி இணைக்கப்பட்டு 3 ஆண்டாகிறது. 7வது மண்டலமான அம்பத்தூரில் 15 வார்டுகள் உள்ளன. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அம்பத்தூர், கொரட்டூர், மண்ணூர்பேட்டை, மங்கலபுரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான முக்கிய சாலைகள், குறுக்கு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பெய்து வரும் பருவ மழையால் சாலைகளும் சேறும் சகதியுமாக மாறி, மக்கள் நடமாட முடியாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். …

மேலும் படிக்க

வட சென்னையில் இரத்ததான முகாம்

நண்பர்கள் நகர நல அமைப்பு மற்றும் காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் 02-10-2014, வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, நெ2/2, நரசய்யர் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை – 600 021 என்ற முகவரியில் நடைபெறுகிறது. தொடர்புக்கு : 90257 33777, 93607 79797  

மேலும் படிக்க

“ஜீனியஸ் விருது” வழங்கும் விழா மற்றும் “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” ஐந்தாம் ஆண்டு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன், ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மாத இதழ் இணைந்து நடத்தும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விழங்கும் சாதனையாளர்களுக்கு இவ்வாண்டிற்கான “ஜீனியஸ் விருது” வழங்கும் விழா மற்றும் ஐந்தாம் ஆண்டு விழா வரும் சனிக்கிழமை (26-07-2014) பகல் 2 மணியளவில், சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து சிறப்பிக்கும்மாறு கேட்டுக் கொள்கிறோம். அனுமதி இலவசம். இவண்,  

மேலும் படிக்க

போரூர் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 61, தோண்டத்தோண்ட அழுகிய நிலையில் பிணங்கள்

போரூர் கட்டிட விபத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. தோண்டத்தோண்ட அழுகிய நிலையில் பிணங்களாக மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28–ந் தேதி நடைபெற்ற கோர கட்டிட விபத்தில் நேற்று முன்தினம் இரவு வரை நடைபெற்ற மீட்பு பணிகளில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 27 பேர் உயிருடனும், 50 பேர் பிணங்களாகவும் …

மேலும் படிக்க

பொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகத்திற்க்கு சிறப்பு பேருந்துகள்

பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்களுக்கு வசதியாக அண்ணா பல்கலைகழகம் வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: முதல்வரின் உத்தரவுப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 23-ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து …

மேலும் படிக்க

நாளை முதல் புதிய ரயில் கட்டணம் அமல்.

மத்திய அரசு அறிவித்த புதிய ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. நாளை அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் 25ம் தேதி …

மேலும் படிக்க

சென்னையில் மாற்று இதயத்துடன் உயிரைக் காக்க அதிவேகப் பயணம் – பரப்பான அந்த 13 நிமிடங்கள்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்ட தமிழக இளைஞரின் 6 உடல் உறுப்புகள், சென்னையில் இதயக்கோளாறால் சிகிச்சை பெற்றுவரும் மும்பை இளம்பெண் உள்பட பல்வேறு நபர்களுக்கு பொருத்துவதற்காக அறுவை சிகிச்சை மூலம் திங்கள்கிழமை மாலை அகற்றப்பட்டது. இதில் இதயம் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு, அடையாறு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள இளம்பெண்ணுக்கு பொருத்து வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. போலீஸ் ஒத்துழைப்புடன் 11 …

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட் கட்டணங்கள் – டில்லி மெட்ரோ போல, இங்கும் சீசன் டிக்கெட் கிடையாது!

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையும் நிலயில் உள்ளன. சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு, செயின்ட்தாமஸ் மவுண்ட் வழியாக மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உள்ள 10 …

மேலும் படிக்க

சிபிசிஐடிக்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி.க்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை திறந்து வைத்தார். இன்று காலை 11.30 மணிக்கு கட்டடத் திறப்பு திறப்பு விழா நடைபெற்றது.  இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று கட்டடத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. கே.ராமானுஜம் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை …

மேலும் படிக்க