செய்திகள்

‘ஐ’-யை முந்திய ‘கத்தி’

அனிருத் இசையில் வெளியாகியுள்ள ‘கத்தி’ திரைப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் ஐ-டியூன்ஸ் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன், ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள’ பாடல் திருட்டுத்தனமாக வெளியானது. இது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. நேற்று கத்தி …

மேலும் படிக்க

நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல: நடிகர் விஜய்

நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல என்று ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உருக்கமாக பேசினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் விஜய், “இன்றைய நாயகன் அனிருத் தான். மிக அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு …

மேலும் படிக்க

இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் காலமானார் – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் மரணம் அடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் ஸ்ரீநிவாசன். இவரது தந்தை சத்யநாராயணன் மாண்டலின் இசைக் கலைஞராவார். அவரிடம் இசைக் கருவியை …

மேலும் படிக்க

மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன்!

அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன். விழாவில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், தாயார் கீதா வரதராஜன், மனைவி இந்து முகுந்த், …

மேலும் படிக்க

ஷங்கரின் “ஐ”, “The Fly(1986)”: காப்பியா?

சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த, சமீபத்தில் பிரமாண்டமாக (சொதப்பலாக) இசை வெளியீட்டு விழா நடந்த “ஐ” படத்தின் கதை என்று இணையத்தில் ஒரு கதை உலா வருகிறது. அக்கதையின்படி இந்தப் படம் “த  ஃப்ளை” என்று 1986 ல் வெளிவந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து …

மேலும் படிக்க

நடிகர் விஜய் க்கு எச்சரிக்கை

ஏ ஆர் முருகதாஸ் இயக்க, விஜய் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் கத்தி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனம், ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானது, ராஜபக்சே உறவினர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி, தமிழ் அமைப்புகள், கட்சிகள் கத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 65 அமைப்புகள் ஒன்றாக இணைந்து கத்தி படத்துக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன. ஆனால் லைகா நிறுவனமோ எங்களுக்கு ராஜபக்சேவுடன் …

மேலும் படிக்க

ஐ படம் இசை இன்று வெளியீடு: ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பங்கேற்பு

சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் “ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நட்சத்திர நடிகர் அர்னால்ட் பங்கேற்கிறார். “ஆஸ்கர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி வரும் படம் “ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பாடலாசிரியர் கபிலன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படப்படிப்பில் இருந்துவரும் …

மேலும் படிக்க

வியக்க வைத்த ‘ஐ’ படக் காட்சிகள்: ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்

இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ திரைப்பட இசை வெளியீட்டிற்கு ஹாலிவுட் பிரபலம் அர்னால்ட் கலந்துகொள்வதை தற்போது ஒரு வீடியோ பதிவின் மூலம் அர்னால்டே உறுதி செய்துள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில், விக்ரம், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஐ’ திரைப்படத்தின் இசை வெளியீடு, வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. மிகப் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த ஆஸ்கர் ரவிச்சந்திரன், …

மேலும் படிக்க

அஜித் ரசிகர்கள் கண்டன போஸ்டர்

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை கைது செய்யக் கோரி மதுரையில் அவரது ரசிகர்கள் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர். கடநத் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திருவல்லிகேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் தூண்டித்துவிட்டார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் …

மேலும் படிக்க

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் பேசி மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அஜீத் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூரில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு பேசிய மர்ம ஆசாமி நபர், திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி …

மேலும் படிக்க