பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி மக்களவை தேர்தலில் போட்டியிட வதோதராவில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தான் திருமணமானவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவியின் பெயர் ஜசோடா பென் எனவும் குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மனைவியின் பெயர் ஜசோடா பென் என்றும், அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் …
மேலும் படிக்கசென்னையில் வேகமாக பரவும் சின்னம்மை நோய்
சென்னையில் சின்னம்மை வேகமாக பரவி வருகிறது. தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட 30 பேர் சின்னம்மைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, மேடவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்னம்மை நோய் பரவி வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சின்னம்மையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்கள் மேல் சிகிச்சைக்காக தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
மேலும் படிக்கநீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி மனு சென்னை ஹைகோர்ட்டில் தள்ளுபடி
நீலகிரி தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. நீலகிரி தொகுதியில் பாரதிய ஜனதாவின் வேட்பாளராக குருமூர்த்தி அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பும னுவை தாக்கல் செய்த போது கட்சியின் கடிதத்தை இணைக்கவில்லை. அதேபோல் பாஜகவின் மாற்று வேட்பாளரும் தமது மனுவில் இணைக்கவில்லை. இதனால் குருமூர்த்தி மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் …
மேலும் படிக்கதாக்கியவரை நேரில் சந்தித்த கெஜ்ரிவால்.. மன்னிப்பு கேட்டார் அடித்த ஆட்டோ டிரைவர்
டெல்லி சுல்தாபுரில் பிரசாரம் செய்த போது லாலி என்ற ஆட்டோ டிரைவர் திடீரென கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்து விட்டார். லாலியின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று லாலி வீட்டுக்குப் சென்ன்றார். பின்னர் லாலிக்கு அவர் மாலை அணிவித்து, அவரிடம் பேசினார். கன்னம் வீங்கிய நிலையில் காணப்பட்ட கெஜ்ரிவாலிடம் லாலி மிகவும் உருக்கமாகப் பேசி மன்னிப்பு கோரினார். லாலி கெஜ்ரிவாலை அடித்ததுமே அவரை ஆம் ஆத்மி கட்சியினர் …
மேலும் படிக்கவடகறி – டீசர்
யாமிருக்க பயமே! டிரைலர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு இரா. கிரிராஜன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம்
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி ஓட்டேரி பாலம் சந்திப்பு, திரு.வி.க.நகர் பகுதியில் கழகத்தின் தலைவர் கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட கழக வெற்றி வேட்பாளர் திரு இரா. கிரிராஜன் அவர்களை ஆதரித்து பேசியபோது, வரவிருக்கும் 24ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தல், மத்தியில் மதசார்பற்ற ஒரு ஆட்சியை உருவாக்க நடக்க விருக்கும் தேர்தல். அந்த தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் கைகாட்டிய வேட்பாளரான கிரி ராஜன் அவர்களை ஆதரிக்க உங்களிடம் ஓட்டு கேட்க …
மேலும் படிக்கஅரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் தாக்கப்பட்டார் – அரசியலில் நல்லவர்கள் அடிமேல் அடி வாங்குவார்களோ?
டெல்லி சுல்தான்புரியில் கேஜ்ரிவால் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த அவரது கன்னத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அறைந்தார். அவரும் ஆம் ஆத்மி தொப்பி அணிந்திருந்தார் உடனடியாக அந்த நபரை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். பின்பு அந்த நபர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சம்பவத்திற்குப் பின்னர் பாஜகவை கடுமையாக விமர்சித்த கேஜ்ரிவால், பிரதமர் பதவியை அடைய ஏன் சிலர் வன்முறையை கடைபிடிக்கிறார்கள் என தெரியவில்லை. …
மேலும் படிக்கநீலகிரி பாஜக வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி வழக்கு, அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீலகிரி தொகுதியில் குருமூர்த்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய வேட்பும னுவும் மாற்று வேட்பாளர் மனுவும் நேற்று அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டன. இவர்கள் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான கடிதத்தைக் கொடுக்கவில்லை என்பதால் வேட்புமனுக்கள் தள்ளுபடியானதாக கூறப்பட்டது. …
மேலும் படிக்கபரதேசி சிறந்த திரைப்படமாக நார்வே திரைப்பட விழாவில் தேர்வு
நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த படமாக பாலா இயக்கிய பரதேசி படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர் – ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா சிறந்த நடிகை – ‘விடியும் முன்’ படத்திற்காக பூஜா. சிறந்த இயக்குனர் – பாலா …
மேலும் படிக்க