ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சீன தேசிய தினத்துக்கு முன்னதாக ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். இது வரை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களிலேயே, செவ்வாய் கிழமை நடக்கும் போாரட்டம்தான் மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கில் இரவு நேரம் நெருங்கிய நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் நகரின் மையப்பகுதியிலும், முக்கிய சந்திப்புகளிலும் குவிய ஆரம்பித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னதாகக் கலைந்து போகச் சொன்ன சீனாவின் …
மேலும் படிக்கஆசிய விளையாட்டுப் போட்டி : தங்கம் வென்றார் மேரி கோம்
ஆசிய விளையாட்டு மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றார். 51 கிலோ எடைப்பிரிவில் மேரிகோம் தங்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேரி கோம் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 5 முறை உலக சாம்பியனான மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனை ஜாய்னா ஷெகெர்பெகோவா என்பவரை 2-0 என்று வெற்றி பெற்றார்.
மேலும் படிக்கஅமெரிக்க வெள்ளை மாளிகையில் மோடி எழுதிவைத்த வாழ்த்துக் குறிப்பு
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி எழுதி வைத்த வாழ்த்துக் குறிப்பு. இதில், வெள்ளை மாளிகையில் தாம் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களையும், இரு நாட்டு உறவுகளுக்கான கட்டாயத்தையும் குறிப்பிட்டும், மக்களை இணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி எழுதியுள்ளார்.
மேலும் படிக்கஜெயலலிதா மீதான தண்டனை ரத்து, ஜாமீன் வழக்கு விசாரணை அக்.7-க்கு ஒத்திவைப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம்
தண்டனை ரத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு அக்டோபர் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் புதிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா உடனடியாக ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை …
மேலும் படிக்கஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்: ஜாமீன் மனு மீது நாளை மீண்டும் விசாரணை
ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனு மீது நாளையே (புதன்கிழமை) விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றது. ஜாமீன் கோரியும், தண்டனை ரத்து கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்ட நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அவசர மனு ஒன்றை அளித்தனர். கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்கப்பட்ட அந்த …
மேலும் படிக்கவட சென்னையில் இரத்ததான முகாம்
நண்பர்கள் நகர நல அமைப்பு மற்றும் காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் 02-10-2014, வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, நெ2/2, நரசய்யர் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை – 600 021 என்ற முகவரியில் நடைபெறுகிறது. தொடர்புக்கு : 90257 33777, 93607 79797
மேலும் படிக்கபிரதமர் மோடியை வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா
பிரதமராகப் பொறுப்பேற்ற பின் நரேந்திர மோடி, முதல் முறையாக கடந்த 25ம் தேதி அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபை கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்தார். அவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா ‘கெம் சோ’ எப்படி இருக்கிறீர்கள் என குஜராத் மொழியில் நலம் விசாரித்தார். தொடர்ந்து இருவரும் …
மேலும் படிக்கஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 6க்கு ஒத்திவைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 6ம் தேதி வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பெங்களுரு உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், இன்று இந்த மனு தொடர்பில் விடுமுறைக்கால சிறப்பு அமர்வின் நீதிபதி ரத்னகலா …
மேலும் படிக்கடென்னிஸ் மற்றும் வட்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்
தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10-வது நாளில், இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் கிடைத்தன. டென்னிஸ் ஆட்டத்தின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா – சாகேத் மைனேனி ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிருக்கான வட்டு எறிதலில் சீமா புணியா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் ஜெய்ஷா, மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் நவீன் …
மேலும் படிக்ககுறுகியக் காலக் கடன்(ரெப்போ)க்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : RBI
ரிசர்வ் வங்கியால் பிற வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி(RBI) ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தில் மாற்றமில்லை என்றும், அது தற்போதிருக்கும் 8% ஆகவே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி