‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்தின் துவக்க விழாவில், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை துவக்கி வைத்த வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க உரிமங்கள் வழங்குவதை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு …
மேலும் படிக்கமங்கள்யான் வெற்றி : தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இன்று வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை உலகம் முழுவதில் இருந்தும் பலர் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செயதியில் கூறியிருப்பதாவது: நமது விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை இன்று(24,09,2014) செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளனர். இது இந்தியா மற்றும் இஸ்ரோவின் (ISRO) வரலாற்று சிறப்பு மிக்க சாதனையாகும். இந்த சாதனையை நிகழ்த்திய அனைத்து …
மேலும் படிக்கமங்கள்யான் வெற்றி இந்தியர்கள் கொண்டாட வேண்டிய தருணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
இஸ்ரோ விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார். இஸ்ரோ சென்று விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய பிரதமர், அப்போது மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார். அப்போது, இந்திய அணி …
மேலும் படிக்கதமிழகத்தில் மின் கட்டணம் உயருகிறது: தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரை
ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான கட்டண விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. 2014-15ம் நிதியாண்டுக்கான மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 6,805 கோடி ரூபாய் அளவுக்கு மின் …
மேலும் படிக்கஇந்திய மங்கள்யான் , அமெரிக்க கியூரியாஸிட்டியும் ட்விட்டரில் நலம் விசாரிப்பு
Namaste, @MarsOrbiter! Congratulations to @ISRO and India’s first interplanetary mission upon achieving Mars orbit. — Curiosity Rover (@MarsCuriosity) September 24, 2014 Howdy @MarsCuriosity ? Keep in touch. I’ll be around. — ISRO’s Mars Orbiter (@MarsOrbiter) September 24, 2014 செவ்வாயை ஆராய்ச்சி செய்து வரும் நாசாவின் கியூரியாஸிடி விண்கலமும், செவ்வாய் ஆராய்ச்சியில் இணைந்திருக்கும் இந்தியாவின் மங்கள்யான் …
மேலும் படிக்கடெல்லி தேசிய பூங்காவில் இளைஞரை வெள்ளைப் புலி அடித்துக் கொன்றது
டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் தவறி புலியின் கூண்டில் விழுந்த இளைஞர் ஒருவரை வெள்ளை புலி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து நேரில் கண்ட ஒருவர் கூறும்போது, “உயிரியல் பூங்காவில் சுற்றுலாவுக்காக வந்த இளைஞர் ஒருவர், 12.30 மணி அளவில் அங்கு உள்ள அரிய வகை வெள்ளைப் புலி இருக்கும் பகுதிக்கு தனது நண்பருடன் வந்திருந்தார். தடுப்புகளுக்குள் …
மேலும் படிக்கமங்கள்யான் செவ்வாய் கிரகப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது:
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் புதன்கிழமை (செப்.24) காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தை ஒட்டிய சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. கடந்த 2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும். மங்கள்யானின் வேகத்தை குறைக்கும் திரவ இயந்திரம் இன்று காலை 7 மணி 41 நிமிடங்களுக்கு …
மேலும் படிக்ககட்டண உயர்வைக் கண்டித்து சுங்கச்சாவடிகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என அறிவித்த மத்திய அரசுக்கும், உணவுப் …
மேலும் படிக்கசெவ்வாய் சுற்றுவட்டப் பாதையை நாளை அடைகிறது மங்கள்யான்
செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம் நேற்று தனது திரவ எரிபொருள் இன்ஜினை வெற்றிகரமாக இயக்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) சார்பில், கடந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம், கடந்த 300 நாள்களுக்கும் மேலாக விண்வெளியில் பறந்து செவ்வாய்க்கிரக ஈர்ப்பு விசைக்குள் சென்றது. செப்டம்பர் 24-ஆம் தேதி காலை 7.17 மணி 32 நொடிக்கு 440 நியூட்டன் திரவ …
மேலும் படிக்கஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: கோவை, தூத்துக்குடி மேயர் தேர்தலில் அதிமுக வெற்றி
உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை, தூத்துக்குடி மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி தூத்துக்குடி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி 1,16,593 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக வேட்பாளார் 31,708 வாக்குகள் பெற்றார். பிற கட்சிகள் 1305 வாக்குகள் பெற்றுள்ளன. கோவை கோவையில், அதிமுக வேட்பாளர் கணபதி 1,13,180 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். பாஜக வேட்பாளர் 37,585 வாக்குகளும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி