ஆஸ்கார் விருது பெற்ற புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகரும், இயக்குநருமான ரிச்சர்ட் அட்டன்பரோ ஞாயிறன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் மாடிப்படியில் தவறி விழுந்ததை அடுத்து, வீல் சேரில் இருந்தே இயங்கிக்கொண்டிருக்க வேண்டிய நிலையிலும் அவர் இருந்தார். சுமார் 60 வருடங்களாக திரைத்துறையில் நடிகர், இயக்குநர் என்ற பல்வேறு துறைகளில் பங்களிப்பைச் செய்தவர் …
மேலும் படிக்கஅமெரிக்காவுக்கு செக்: நான்கு மெக்டொனால்ட் உணவகங்களை மூடிய ரஷ்யா
ரஷ்யாவில் உள்ள அமெரிக்காவின் நிறுவனமான மெக்டொனால்ட்டின் 4 உணவகங்களை தாற்காலிகமாக மூட ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த 4 மெக்டொனால்ட் உணவகங்களிலும் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள், உணவகங்கள் சுகாதாரமான வகையில் பராமரிக்கப்படவில்லை என்று கூறி அவற்றை தாற்காலிகமாக மூடவும், இதுபோன்ற ஆய்வுகள் ரஷ்யாவில் உள்ள அனைத்து மெக்டொனால்ட் உணவகங்களிலும் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடையை முன்னெடுத்துள்ள அமெரிக்காவுக்கு …
மேலும் படிக்கபோதைப் பொருள் வைத்திருந்ததாக ஜாக்கி சானின் மகன் கைது
உலக நடிகர்களில் முக்கியமானவரான ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சான், போதைப் பொருட்களை பதுக்கியக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சி சானின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், 100 கிராம் எடை கொண்ட மரிஜூவானா என்ற போதைப் பொருளை காவல்துறையினர் கைப்பற்றியதாகவும், இதையடுத்து, ஜெய்சி சானும், அவரது நண்பர் கை கோ சென்டங்கும் போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜெய்சி சானுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் …
மேலும் படிக்க“கொடும்பாவி” ராஜபக்சேவின் இறுதி ஊர்வலம்…
இலங்கை அதிபர் ராஜபக்சே இறுதி ஊர்வலம் சென்னையில் நடந்தது! இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இறுதி ஊர்வலம் 7-ஆம் தேதி வியாழக் கிழமை காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள நெற்றிக்கண் வார இதழ் அலுவலகத்திலிருந்து துவங்கி, லயோலா கல்லூரி வரை தாரை தம்பட்டையுடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி தலைமையில், தமிழ்நாடு பத்திரிகையாளார் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த இறுதி ஊர்வலத்திற்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் …
மேலும் படிக்கமாயமான அல்ஜீரிய விமானம் ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் பகுதியில் விபத்துக்குள்ளாகியது #AH5017
மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து 116 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் அல்ஜீரியா விமானம் நைஜர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 116 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவின், வாகடூகு அருகிலுள்ள புர்கினா பாஸோ விமான நிலையத்தில் இருந்து அல்ஜீரியா தலைநகரின் ஹொவாரி விமான நிலையத்திற்கு செல்லும் ஏர் அல்ஜீரிய விமானம் ஒன்று புறப்பட்டது. இதில், 110 பயணிகளும், 2 விமானிகளும், 4 விமானப் பணியாளர்களும் இருந்தனர். இந்நிலையில், …
மேலும் படிக்க110 பயணிகளுடன் மாயமானது அல்ஜீரிய விமானம்: கடத்தப்பட்டதா?
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அல்ஜீரியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஏர் அல்ஜீரியா பயணிகள் விமானம் ஒன்று மாயமானதாக திடுக்கிடும் தக்வல் வெளியாகியுள்ளது. பர்கினா ஃபாஸோ என்ற இடத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் 1 மணி நேரத்திற்குப் பிறகு தொடர்பை இழந்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ’வான்வழிச் சேவைகள் இயக்ககம் ஏர் அல்ஜீரியா விமானத்தின் தொடர்பை இழந்துவிட்டது. இந்த விமானம் உவாகாடவ்கோவிலிருந்து அல்ஜியர்ஸ் செல்லும் விமானம் ஆகும். விமானம் தரையிலிருந்து கிளம்பிய 50 …
மேலும் படிக்கMH17 மலேசிய விமான பயணியின் ஃபேஸ்புக் ‘ஜோக்’ நிஜமான சோகம்
கார் பான் (Cor Pan) என்ற நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞர் தனது மொபைலில் பிடித்த எம்.ஹெச்.17 விமானத்தின் புகைப்படத்தை இணைத்து, அதில் “ஒருவேளை இது மாயமானால், விமானம் இப்படித்தான் இருந்தது என்பதை அறிவீர்” எனும் பொருள்தரும் பதிவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார். ஆனால், ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கிழக்கு உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் நொறுங்கி விழுந்தது. அதில், பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர். அதில், தனது காதலியுடன் …
மேலும் படிக்கஏ.ஆர் ரகுமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அமெரிக்கா பல்கலைகழகம்
இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைப்பள்ளியான பெர்க்லீ, வரும் அக்டோபர் 24-ஆம் தேதி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், “இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பெர்க்லீ இசைப்பள்ளி வழங்கும் விருதினைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மேலும் வருங்கால இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக எனது பெயரில் உதவித் தொகை வழங்கவுள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்’ …
மேலும் படிக்கமலேசிய விமானம் எரியும் வீடியோ:
நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ஏவுகணையால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகியுள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 295 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று மதியம் 12.10 மணிக்கு கிளம்பியது. விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ஏவுகனையால் தாக்கினர். இதையடுத்து விமானம் ஷக்தர்ஸ்க் என்ற …
மேலும் படிக்கமலேசியாவுக்கு இது மோசமான வருடம்: பிரதமர் நஜீப் ரஸாக் வருத்தம்
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுடப்பட்டு விபத்து ஏற்பட்டதாக வந்த செய்தி அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்திருந்தார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் தெரிவித்தபோது, இந்த விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் இது குறித்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டிருந்த போது, அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் அழைத்து வருத்தம் …
மேலும் படிக்க