செய்திகள்

குஜராத்திலும் விரைவில் மலிவு விலை உணவகங்கள்!

அம்மா உணவகங்கள் போல் குஜராத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஏழை எளியோர்கள் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வெளியூர்களில் இருந்து வந்து செல்வோர் குறைந்த செலவில் உணவருந்தி செல்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை தொடங்கினார். இங்கு மலிவு விலையில் காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் உணவு கிடைக்கிறது. அம்மா உணவகங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், உணவுகள் தரமான முறையில் …

மேலும் படிக்க

அரபிக்கடலில் நானவு புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்

கிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு, வட மேற்காக நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நானவுக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சின்னம் மும்பைக்கு 670 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தென்மேற்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிரமான புயலாக மாறக்கூடும் …

மேலும் படிக்க

நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் திருமணம் நடந்தது

இயக்குனர் விஜய் – அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது. தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஜூன் 7-ம் தேதி விஜய் – அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து இன்று …

மேலும் படிக்க

இமாச்சல பிரதேசத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் காட்சி

இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற …

மேலும் படிக்க

சிபிசிஐடிக்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை எழும்பூரில் சி.பி.சி.ஐ.டி.க்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை திறந்து வைத்தார். இன்று காலை 11.30 மணிக்கு கட்டடத் திறப்பு திறப்பு விழா நடைபெற்றது.  இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று கட்டடத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. கே.ராமானுஜம் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை …

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கேஜ்ரிவால் திட்டம்

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லியில் நிலவும் மின் பற்றாக்குறை குறித்து பேச, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். டெல்லியில் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினை தற்போது அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருவதால், மின் நெருக்கடியைக் குறைக்க அந்த துறை அதிகாரிகளுடன் ஆளுநர் நஜீப் ஜங் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை …

மேலும் படிக்க

பொறியியல் சேர்க்கைக்கான ரேண்டம் எண் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது

பொறியியல் கலந்தாய்வு, ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாணவர் சேர்க்கை மற்றும் நுழைவுத் தேர்வு மையத்தில் காலை 9.45 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் ரேண்டம் எண்ணை வெளியிட்டார். மாணவர்கள் ரேண்டம் எண்களை, பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.annauniv.edu ல் தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர …

மேலும் படிக்க

சென்னை முகப்பேரில் நிர்வாணமாக “பாய்ஸ்” சினிமா பாணியில் ஓடிய வாலிபரால் பரபரப்பு

சென்னை: முகப்பேர், நொளம்பூர் அப்பார்ட்மெண்ட்கள் நிறைந்த கோகுலம் ஃபேஸ் 1 பகுதியில் இரவு 8.30 மணியளவில் ஒரு வாலிபர் “பாய்ஸ்” சினிமா ஹீரோ பாணியில் நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படடைத்துள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்த போது, அதிகமான போதையில் இருந்த அவர் முன்னுக்கு பின்னாக பேசியுள்ளார். ஏன் அவர் இப்படி செய்தார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. …

மேலும் படிக்க

“அம்மா உப்பு” நாளை முதல் விற்பனைக்கு வருகிறது

அம்மா உப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் மலிவு விலையிலான அம்மா உப்பு நாளை முதல் விற்பனைக்கு வருகிறது. இதில் இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. முதல் வகை உப்பு ரூ.14க்கும் (வெளி மார்க்கெட்டில் ரூ.22க்கு விற்கப்படுகிறது), 2–வது வகை …

மேலும் படிக்க

மக்கள் விழிப்புணர்வு பெற உங்கள் உதவி தேவை – காவல்துறை உதவி ஆணையர் வேண்டுகொள்.

நாலு பேருக்கு நன்மை செஞ்சா நல்லவங்களை விடமாட்டாங்க…. என்ற பாடல் வரிகளை பொய்யாக்கி வருவதில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன் தங்கள் பணியில் அர்ப்பணம் செய்து வருகின்றனர் என்பதற்கு அடையாளம்தான் மணலி புது எம்ஜிஆர் நகரில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்டங்கள் உதவி வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்கள். மணலி, மாதவரம் நகரியம் (PPFA) தலைவர் எஸ். மாபு பாஷா தலைமையில் மணலி நகரியம் (PPFA) …

மேலும் படிக்க