அமுரா

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன்

காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் நியாயமற்ற பேச்சு கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் அண்மையில் அறிவித்தது கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாறானது எனவும் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தை …

மேலும் படிக்க

உட்கட்சி தேர்தலில் முறைகேடு: பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்

கர்நாடக அதிமுக உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி, கர்நாடக அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வராஜ் உள்பட 35 பேர் பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, வரும் 26ம் தேதிக்குள், இது குறித்து பதிலளிக்க வேண்டும் …

மேலும் படிக்க

நடிகை சரண்யா மோகன் திருமணம் நடைபெற்றது!

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகனின் திருமணம் கேரளாவின் ஆலப்புழாவில் நேற்று நடைபெற்றது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்கமாட்டேன் என்று சரண்யா கூறியுள்ளார்.

மேலும் படிக்க

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் திருமண நிச்சயதார்த்தம்!

இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் – அட்சயாவின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை தி பார்க் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

மேலும் படிக்க

சோனி டிவியின் இண்டியன் ஐடல் டைட்டில் வாய்ப்பை நழுவ விட்ட சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ!

சோனி டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவுடன் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் முதல் இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியை வென்றவர் தமிழ்ப் பெண் அஞ்சனா. பெங்களூரில் வசிக்கும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இந்தியன் ஐடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். இதனால் இந்தமுறை நித்யஸ்ரீயும் அதேபோல …

மேலும் படிக்க

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு பேரிழப்பு ஏற்படும்: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மிரட்டல்

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் அண்மையில் பேசுகையில் இந்திய ராணுவம் விரைவான, குறுகிய காலப் போருக்கு தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் கடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் 50ஆவது ஆண்டு தினம், பாகிஸ்தான் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தேசியப் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகம் …

மேலும் படிக்க

நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்!

1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும். 2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு …

மேலும் படிக்க

அட்லாண்டிக் பெருங்கடலை நீந்திக் கடக்க முயற்சி

அட்லாண்டிக் பெருங்கடலை நீந்திக் கடக்க பலர் முயற்சித்திருந்தாலும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முழுமையாக யாரும் அதை இதுவரை நீந்திக் கடந்தது இல்லை. அப்படியான சாதனையை பிரிட்டனைச் சேர்ந்த பென் ஹூப்பர் முன்னெடுக்கவுள்ளார். மேற்கு ஆப்ரிக்க நாடான செனிகலின் தலைநகர் டாக்காரிலிருந்து தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்கு கடற்கரை நகரான நடாலுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் அவர் நீந்தவுள்ளார். இடைப்பட்ட தூரமான சுமார் 3500 கிலோமீட்டர்களை அவர் 120 …

மேலும் படிக்க

மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 40 பேர் படுகாயம்

கடலூர் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஏறக்குறைய 40 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, “திருச்சி ரயில்வே சரகத்துக்கு உட்பட்ட பூவனூர் எனும் இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 16859 வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் எதிர்பாராத விதமாக தடம் …

மேலும் படிக்க

மகப்பேறு கால விடுமுறை 3 மாதத்திலிருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணிபுரியும் பெண்களுக்கு தாய்மை அடையும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு முந்தைய சிக்கலைவிட பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைக் கூட கவனிக்க முடியாமல் மூன்று மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருக்கிறது. …

மேலும் படிக்க